சமிமா கரீம் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிமா கரீம் சௌத்ரி
শামীমা করিম চৌধুরী
சமிமா கரீம் சௌத்ரி
போசு மையத்தின் இயக்குநர், தாக்கா பல்கலைக்கழகம்
பதவியில்
மார்ச் 2010 – சூன் 2017
மேதகர், ரோக்கியா மாளிகை, தாக்கா பல்கலைக்கழகம்
பதவியில்
அக்டோபர் 1999 – பெப்ரவரி 2002
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சமிமா கரீம்

(1951-02-12)பெப்ரவரி 12, 1951
கொமிலா நகரம், வங்காளதேசம்
தேசியம்வங்கதேசத்தவர்
துணைவர்நய்யும் சௌத்ரி
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரி
வேலைகற்பித்தல், ஆராயச்சி, பல்கலைகழக நிர்வாகம்
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

சமிமா கரீம் சௌத்ரி (Shamima Karim Choudhury) (பிறப்பு பிப்ரவரி 12, 1951) ஓர் வங்காளதேச இயற்பியலாளரும், கல்வியாளரும், ஆராய்ச்சியாளரும், பெண்கள்-அறிவியல் வழக்கறிஞரும் ஆவார்.[1] 44 வருட கற்பித்தல், ஆராய்ச்சிக்குப் பிறகு 30 சூன் 2016 அன்று தாக்கா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பேராசிரியராக ஓய்வு பெற்றார். இவர் இயற்பியலில் 70க்கும் மேற்பட்ட முதுநிலை, முதுதத்துவமாணி மாணவர்களை மேற்பார்வையிட்டார். இவர் வங்காளதேச இயற்பியல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் வளரும் உலகத்துக்கான அறிவியல் பெண்களுக்கான அமைப்பு, இயற்பியல் நிறுவனம் போன்ற பல தேசிய அறிவியல் சங்கங்களில் உறுப்பினராக உள்ளார். இவர் வங்காளதேசத்தில் சர்வதேச இயற்பியல் நிறுவனத்தின் குழுத் தலைவராக உள்ளார். இவர் ரோக்கியா மாளிகையின் மேதகராகவும், தாக்கா பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியலில் மேம்பட்ட ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான போசு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். (பேராசிரியர் சத்தியேந்திர நாத் போசு பெயரிடப்பட்டது) [2]

கல்வி[தொகு]

சமிமா 1971இல் தாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[1] 1973இல் முதிநிலை அறிவியல் பட்டம் பெற்றார். 1978 முதல் 1982 வரை ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1986 -1988இல் பேராசிரியர் லூயிஸ் ஜான்சனுடன் பணிபுரிந்தார். இங்கிலாந்தின் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிர் இயற்பியல் ஆய்வகத்தில் வருகை தரும் விஞ்ஞானியாக இருந்தார்.

அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் பல சர்வதேச மாநாடுகள், இயற்பியலில் பெண்கள் மற்றும் பாலின உச்சிமாநாட்டில் சௌத்ரி அழைக்கப்பட்ட பேச்சாளராக பங்கேற்று வருகிறார்.டெய்லி ஸ்டார் உடனான ஒரு நேர்காணலில், மருத்துவம் அல்லது பிற துறைகளில் சேர்வதோடு ஒப்பிடும்போது இயற்பியல் மற்றும் அறிவியலில் பெண்களின் சதவீதம் விகிதத்தில் குறைவாக இருப்பதாக இவர் சுட்டிக்காட்டினார். இவர் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், அறிவியல்,[3][4][5] இயற்பியல் ஆகியவற்றில் பெண்களின் பாலின சமத்துவத்திற்காக தீவிரமாகப் பேசினார்.

அறக்கட்டளை[தொகு]

வங்காளதேச இயற்பியல் சங்கம் 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் சமிமா கரீம் சௌத்ரி அறக்கட்டளை நிதி உதவித்தொகையை வழங்குகிறது. தனது இளம் அறிவியலில் அதிக மதிப்பெண் பெறும் ஒரு மாணவ/ ஒரு மாணவிக்கும் தாக்கா பல்கலைக்கழக இயற்பியல் துறையில் படிக்கும் பின்தங்கிய மாணவர் ஒருவருக்கும் உதவித் தொகை வழங்குகிறது.[6]

சொந்த வாழ்க்கை[தொகு]

சமிமா சௌத்ரி 1951இல் கொமிலாவில் பிறந்தார். இவரது தந்தை பசுலுல் கரீம் முதல் முஸ்லிம் பேராசிரியரும் கொமிலா விக்டோரியா கல்லூரியின் துணை முதல்வரும் ஆவார். இவரது தாயார் சோகாரா கரீம் ஒரு சமூக சேவகராகவும் கொமில்லாவில் உள்ள அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். வங்காளதேச உயிரி தொழில்நுட்பவியலாளரும் அணு விஞ்ஞானியுமான நய்யும் சௌத்ரி என்பவரை மார்ச் 7, 1976 இல் மணந்தார்.[7] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[7]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Against All Odds-Top women scientists in Bangladesh talk about their careers and the challenges they faced in reaching the top". https://www.thedailystar.net/star-weekend/spotlight/against-all-odds-1534720. 
  2. "The University of Dhaka - Faculty of Sciences". தாக்கா பல்கலைக்கழகம். Archived from the original on 10 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Young Women scientists workshop". Bangladesh Academy of Sciences. Archived from the original on 30 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Women in Science and Technology in Asia" (PDF). National Academy of Sciences Srilanka. Archived (PDF) from the original on 29 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Challenges of Young Women Scientists in New and Emerging Areas" (PDF). Japan Physical Society. Archived from the original on 10 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  6. "Trust Funds of Bangladesh Physical Society". Bangladesh Physical Society. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
  7. 7.0 7.1 "Prof Naiyyum Choudhury passes away". The Energy and Power. 8 September 2019. Archived from the original on 24 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 9 September 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிமா_கரீம்_சௌத்ரி&oldid=3867214" இலிருந்து மீள்விக்கப்பட்டது