மதிப்பெண்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொதுவாகக் கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக மதிப்பெண் வழங்கும் முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முறை வில்லியம் ஃபாரிஷ் (William Farish) என்பவரால் உருவாக்கப்பட்டு, 1792 ஆம் ஆண்டில் முதன் முதலாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மதிப்பெண்கள் வழங்குவதென்பது ஒரு தனியான செயற்பாடு அல்ல. இது முழுமையான ஒரு முறைமையின் ஒரு பகுதியாகும். இம்முறைமையானது பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
- மாணவர்களுக்கான முறையான ஒப்படைகளைத் (assignments) தயார் செய்தல்
- தரம் மற்றும் அடிப்படைகளைத் தீர்மானித்தல்
- முயற்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பிலான தீர்மானங்களை எடுத்தல்
- மாணவர்களின் கற்றலுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவை பற்றித் தீர்மானித்தல்
- பாடநெறிகளின் நோக்கங்களை எய்தும் வகையில் ஒப்படைகளையும் தேர்வுகளையும் வடிவமைத்தல்.
- மாணவர்களுடைய கற்றல் திறனையும், அவர்களுக்கான கற்பித்தல் செயற்திறனையும் மதிப்பீடு செய்தல்.
மதிப்பெண் முறையானது கற்றலுக்கான ஒரு கருவியாகச் செயற்படக்கூடியது. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள், இதனைக் கற்றலுக்கான வழிமுறையின் ஒரு அம்சமாகக் கொள்ளாது, கற்றலுக்கான நோக்கமே மதிப்பெண் பெறுவதுதான் என்ற நிலைக்கு வந்துவிடுவதுண்டு.