சபரி (திரைப்படம்)
| சபரி | |
|---|---|
| இயக்கம் | சுரேஷ் |
| தயாரிப்பு | சலீம் சந்திரசேகர் |
| கதை | சுரேஷ் |
| திரைக்கதை | பட்டுக்கோட்டை பிரபாகரன் |
| இசை | மணிசர்மா |
| நடிப்பு | விஜயகாந்த் ஜோதிமயி மாளவிகா மகாதேவன் ராஜஸ்ரீ |
| ஒளிப்பதிவு | முரளி |
| சண்டைப் பயிற்சி | றொக்கி ராஜேஸ் |
| வெளியீடு | 2007 |
| ஓட்டம் | நிமிடங்கள் |
| மொழி | தமிழ் |
சபரி மார்ச் 20, 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை சுரேஷ் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களாக விஜயகாந்த், ஜோதிமயி, மாளவிகா, மகாதேவன், ராஜஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காவல்துறையின் தேடுதல் வேட்டை ஒன்றின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகித் தப்பி வரும் குற்றவாளி ஒருவனுக்கு அவசர சிகிச்சை செய்கிறார் மருத்துவர் சபரி (விஜயகாந்த்). அதன் பின்னர், குற்றவாளியை காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறார். இதனால் கோபமுற்ற குற்றவாளியின் கும்பல், சபரியை பழி தீர்க்க ஆயத்தமாகிறது. அதன்பின், இரு தரப்புக்கும் இடையே நடக்கும் போரே திரைக்கதையாகும்.
நடிகர்கள்
[தொகு]| நடிகர்கள் | பாத்திரம் |
|---|---|
| விஜயகாந்த் | மருத்துவர் சபரிநாதன் |
| ஜோதிமயி | |
| மாளவிகா | |
| மகாதேவன் | |
| ராஜஸ்ரீ |
பாடல்
[தொகு]இப் படத்திற்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
| பாடல் | பாடியவர்கள் |
|---|---|
| ஓசாமா ஓசாமா | ஏ.வீ. ரமணன், ரஞ்சித், நவீன் |
| ஆவன்னா அக்கன்னா | திப்பூ, சுஜாதா |
| ஒருமுறை சொன்னால் | நவீன், பார்கவி |
| ஆலய மணி | கலயாணி மேனன் |
| ஓம் என்னும் | ரஞ்சித், நவீன், ராகுல் நம்பியார் |
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "சமூக ஆபரேஷனுக்கு கத்தி எடுக்கிற டாக்டர்தான் ‘சபரி’... ஈழத் தமிழர்கள் பற்றிச் சீறலுடன் விஜயகாந்த் கேள்வி கேட்கும் இடத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார். விஜயகாந்த்துக்குக் கத்தி கொடுத்தவர்கள், ஃபிலிமுக்கு கொஞ்சம் கத்திரியும் கொடுத்திருந்தால் ஆபரேஷன் சுமுகமாக இருந்திருக்கும்." என்று எழுதி 39100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: சபரி". விகடன். 2007-04-04. Retrieved 2025-05-24.