சனாகின் மடாலயம்
சனாகின் மடாலயம் Սանահին վանք | |
---|---|
![]() அமெனாப்ர்கிச் (புனித மீட்பர்) தேவாலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சனாகின், லோரி மாநிலம்,![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 41°05′14″N 44°39′58″E / 41.087222°N 44.666111°Eஆள்கூறுகள்: 41°05′14″N 44°39′58″E / 41.087222°N 44.666111°E |
சமயம் | ஆர்மீனிய திருத்தூதர்சார் திருச்சபை |
Official name: ஹக்பாட், சனாகின் மடாலயங்கள் | |
வகை: | பண்பாடு |
வரையறைகள்: | ii, iv |
கொடுக்கப்பட்ட நாள்: | 1996 (20வது அமர்வு) |
மேற்கோள் எண். | 777 |
வலயம்: | மேற்கு ஆசியா |
சனாகின் மடாலயம் (Sanahin Monastery) ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.[1]
ஆர்மீனிய மொழியில் சனாகின் "இது மற்றதை விட முந்தையது" எனப் பொருள்படும்; அருகிலுள்ள ஹக்பாட் மடாலயத்தை விட பழமையானது எனக் குறிக்க இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கலாம். இந்த இரு சிற்றூர்களும் மடாலயங்களும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன; ஒன்றையொன்று நோக்கியவண்ணம் பிளவுபட்ட பள்ளத்தாக்கின் இருபுறமும் அமைந்துள்ளன. இவற்றிற்கு இடையே பள்ளத்தாக்கைப் பிரித்துக்கொண்டு ஆழ்ந்த பள்ளத்தில் தெபெட் ஆறு ஓடுகின்றது.
ஹக்பாட் போலவே, சனாகினும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது. இந்த வளாகத்தையும் இங்குள்ள பல சிலுவை பொறிக்கப்பட்ட கற்களையும் ஆயர் கல்லறைகளையும் ஆர்மீனியன் திருத்தூதர்சார் திருச்சபை நிர்வகிக்கின்றது.