உள்ளடக்கத்துக்குச் செல்

சனம் மார்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சனம் Marvi (Sanam Marvi) (பிறப்பு : 1986 ஏப்ரல் 17) [1] இவர் ஓர் பாக்கித்தான் நாட்டுப்புற மற்றும் சூபி பாடகர் ஆவார். இவர் சிந்தி, பஞ்சாபி மற்றும் பலோச்சி ஆகிய மொழிகளில் பாடுகிறார். [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

சனம் மார்வியின் குழந்தைப் பருவத்தில் கஷ்டங்களும் வறுமையும் நிறைந்திருந்தது. மார்வி தனது 7 வயதில் இசை பயிற்சி பெறத் தொடங்கினார். இவர் ஒரு சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை, பக்கீர் கான் முகம்மது ஒரு சிந்தி நாட்டுப்புற இசைக்கலைஞர் / ஆர்மோனியம் வாசிப்பாளராகவும் இருந்தார். இரண்டு ஆண்டுகள், இவர் தனது தந்தையிடம் ஆரம்ப பாரம்பரிய இசை பயிற்சியினை மேற்கொண்டார். பின்னர் சிந்து மாகாணத்திலிருந்த குவாலியர் கரானா பாரம்பரியத்தின் உஸ்தாத் பத்தா அலி கான் என்பவரிடம் பாரம்பரிய பாடல்கள் மற்றும் இராகங்களைக் கற்றுக்கொண்டார். நாட்டுப்புற பாடகி அபிதா பர்வீனிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன் என்று இவர் கூறுகிறார். [2] [3] இவர் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் ரஃபி பியர் அரங்குகளில் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்

சனம் மார்வி, 2009ஆம் ஆண்டில், யூசுப் சலாவுதீன் தொகுத்து வழங்கிய பாக்கித்தான் தொலைக்காட்சி நிறுவனத்தில் விர்சா ஹெரிடேஜ்' என்ற இசை நிகழ்ச்சியில் அறிமுகமானார். பாக்கித்தானிய பொழுதுபோக்கு துறையில் தனக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்ததற்காக யூசுப் சலாவுதீனை 'தனக்கு ஒரு தந்தை போன்றவர்' என அன்போடு அழைக்கிறார். பின்னர் சனம் மார்வி பாக்கித்தானின் கோக் அரங்கத்தில் பாக்கித்தானிய தொலைக்காட்சித் தொடரில் நேரடி இசை நிகழ்ச்சிகளைக் நிகழ்த்திக் காட்டினார். [2]

மார்வி உலகம் முழுவதும் சூபி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். சூபி, கசல் மற்றும் நாட்டுப்புற வகைகளில் மிகச் சிறந்த கலைஞர்களில் மூன்று பேரில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்ற இருவர் அபிதா பர்வீன் மற்றும் தினா சானி. [4] 1981 ஆம் ஆண்டு திரைப்படமான உம்ராவ் ஜான் புகழ் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் முசாபர் அலி ஏற்பாடு செய்த ஜஹான்-இ-குஸ்ராவ் என்ற சூஃபி இசை விழாவில் இவர் 2010ஆம் ஆண்டின் என்ற இந்திய மண்ணில் ஒரு தனி நிகழ்ச்சியில் அறிமுகமானார். [3] 2011 பிப்ரவரியில், இந்தியாவின் ஐதராபாத்தின் சௌமகல்லா அரண்மனையில் நடந்த டைம்ஸ் ஆப் இந்தியாவின் அமன் கி ஆஷா நிகழ்ச்சியில் இந்திய பின்னணி பாடகி ரேகா பரத்வாஜுடன் இணைந்து நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். [5]

நிகழ்ச்சிகள்

[தொகு]

மார்வி தனது நேரடி இசை நிகழ்ச்சியை 2012ஆம் ஆண்டில் லண்டன், பாரிஸ், நியூயார்க் ஆகிய வெளிநாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளுடன் அறிமுகப்படுத்தினார். ஹதிகா கியானி மற்றும் அலி ஜாபருடன் இணைந்து பாடினார் . [2] ஏ-பிளஸ் என்டர்டெயின்மென்ட்டின் பியா பெடார்டி மற்றும் உருது 1 இன் பச்சே பராயே பரோக் ஆகியோருக்காக இவர் ஓஎஸ்டி பாடினார்.

சூபி கவிஞர்களால் எழுதப்பட்ட வரிகள் பொதுமக்களிடையே உலகளாவிய மற்றும் காலமற்ற முறையீட்டைக் கொண்டுள்ளன என்றும் அந்த வார்த்தைகளில் மக்கள் ஆறுதல் காண்கிறார்கள் என்றும் சனம் மார்வி கருதுகிறார். [2] சமீபத்தில், இவர் நாட்டுப்புற வகையின் பாரம்பரியத்தை முன்னெடுத்து, கோக் அரங்கத்தின் மேடையில் இருந்து 'ஹைரான் ஹுவா' என்ற பாடலை பாடினார். [6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சனம் மார்வி ஹமீத் அலிகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [2] இவரது முதல் கணவர் அப்தாப் அகமது கல்ஹோரோ என்றும் அழைக்கப்படும் அப்தாப் அகமது பரேரோ 2009இல் கராச்சியில் கொலை செய்யப்பட்டார். [7] இவர்கள் 2006இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர். மார்வி அப்தாபின் இரண்டாவது மனைவியாவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Profile of Sanam Marvi on urduwire.com website Retrieved 14 April 2018
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 'First person: Sanam's Sufi calling', Dawn (newspaper) Published 21 July 2013. Retrieved 14 April 2018
  3. 3.0 3.1 Shailaja Tripathi (18 February 2010). "Arts / Music : Messenger of peace". Chennai, India: The Hindu (newspaper). http://www.thehindu.com/features/friday-review/music/article108851.ece. பார்த்த நாள்: 14 April 2018. 
  4. Striking the right chord (Sanam Marvi) பரணிடப்பட்டது 2012-03-19 at the வந்தவழி இயந்திரம் Newsline (magazine), Published Jan 2011. Retrieved 14 April 2018
  5. "Rekha, Sanam performed in Hyderabad". 21 February 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/music/music-events/Rekha-Sanam-performed-in-Hyderabad/articleshow/7533544.cms. . Retrieved 14 April 2018
  6. Coke Studio Season 12 | Hairaan Hua | Sanam Marvi, பார்க்கப்பட்ட நாள் 4 December 2019
  7. "Folk singer`s husband found shot dead". Pakistan. 4 August 2009. http://www.dawn.com/news/879400/folk-singer-s-husband-found-shot-dead. பார்த்த நாள்: 14 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனம்_மார்வி&oldid=3242934" இலிருந்து மீள்விக்கப்பட்டது