ரேகா பரத்வாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகா பரத்வாஜ்
just had big soulful performance at coke studio with kirtidan gadhavi a song ladki under the direction of music director sachin-jigar
பிப்ரவரி 1, 2014இல் போனிக்ஸ் மார்கெட்சிட்டி, பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் ரேகா பரத்வாஜ்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு24 சனவரி 1964 (1964-01-24) (அகவை 60)
தில்லி, இந்தியா
இசை வடிவங்கள்பாலிவுட் பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1997–முதல் தற்போது வரை

ரேகா பரத்வாஜ் (Rekha Bhardwaj) சனவரி 24, 1964இல் பிறந்த இந்திய பாடகி மற்றும் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துபவர். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் ஒரு தேசிய விருதையும் பெற்றுள்ளார்.[1][2] இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி மற்றும் மலையாளம் மொழிகளில் பாடியுள்ளார்.[3]

சொந்த வாழ்க்கை[தொகு]

ரேகா பரத்வாஜ் தில்லியில் பிறந்தார். இவருக்கு 5 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். இவர், திரைப்பட இயக்குனர், இசை அமைப்பாளர், மற்றும் பின்னணிப் பாடகரான விசால் பரத்வாஜ் அவர்களை 1991இல் மணந்து கொண்டார்.[4] இவர், 1984இல் புது தில்லியிலுள்ள "இந்து கல்லூரி"யின் ஆண்டுவிழாவின் போது விசாலை முதன் முதலாகச் சந்தித்தார்.[5]

தொழில் வாழ்க்கை[தொகு]

ரேகா பரத்வாஜ் முதலில் தனது பெரிய சகோதரியிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார். பின்னர், முறையாகப் பண்டிதர் அமர்நாத்திடம் பயிற்சி மேற்கொண்டார்.[6]

பரத்வாஜின் முதல் இசைத்தொகுப்பு "இஷ்கா இஷ்கா" 2002இல் வெளியிடப்பட்டது. இதன் வெற்றி இவருக்கு இசையுலகில் அங்கீகாரத்தை கொடுத்தது. மேலும், இவரது திறனை நிரூபிக்கும் விதமாக அமைந்த ஓம்காரா திரைப்பட பாடலான நமக் இஷ்க் கா பாடலைப் பாடும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. இப் படத்திற்கு இவரது கணவர் விஷால் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய சட்டீஸ்கர் நாட்டுப்புறப் பாடலான சாசுராய் கென்டா பூல் எனத் தொடங்கும் பாடலை 2009இல் தில்லி 6 படத்திற்காகப் பாடியுள்ளார்.[4][7]

விருதுகள்[தொகு]

2011இல், இஷ்கியா(2010) படத்தில் வரும் படி தீரெ ஜாலி பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.[8] 2015 இல், தெத் இஷ்கியா (2014) திரைப்படத்தில் வரும் ஹமாரி அடரியா பெ பாடலுக்காக பிலிம்பேரின் சிறந்த பின்னணிப் பாடகி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rekha Bhardwaj, who has won the National Award for Best Female Playback singer, said it's a great feeling having been able to share the same high with hubby Vishal Bhardwaj, who has won the Best Music Director award for the same film, "Ishqiya". - Times of India". The Times of India இம் மூலத்தில் இருந்து 3 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003031458/http://timesofindia.indiatimes.com/home/Rekha-Bhardwaj-who-has-won-the-National-Award-for-Best-Female-Playback-singer-said-its-a-great-feeling-having-been-able-to-share-the-same-high-with-hubby-Vishal-Bhardwaj-who-has-won-the-Best-Music-Director-award-for-the-same-film-Ishqiya-/articleshow/8494315.cms. 
  2. "Rekha Bhardwaj sings for ‘Bin Roye’ - The Express Tribune" (in en-US). The Express Tribune. 2015-06-10 இம் மூலத்தில் இருந்து 3 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003030356/https://tribune.com.pk/story/901294/rekha-bhardwaj-sings-for-bin-roye/. 
  3. "The lesser known side of singer Rekha Bhardwaj". 11 நவம்பர் 2016. Archived from the original on 12 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2018.
  4. 4.0 4.1 "The lesser known side of singer Rekha Bhardwaj" (in en). hindustantimes.com. 2016-11-11 இம் மூலத்தில் இருந்து 15 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170215203738/http://www.hindustantimes.com/art-and-culture/the-lesser-known-side-of-singer-rekha-bhardwaj/story-DsD3h7QffclAIBSut0IvaM.html. 
  5. "Vishal and I met through music: Rekha Bhardwaj" இம் மூலத்தில் இருந்து 3 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003075037/http://www.radioandmusic.com/entertainment/editorial/news/170821-vishal-and-i-met-through-music-rekha. 
  6. "Lataji can give anyone a complex". Timesofindia.indiatimes.com. 3 ஏப்பிரல் 2006. Archived from the original on 23 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2012.
  7. "Gulzarsaab is my Santa Claus". Specials.rediff.com. Archived from the original on 27 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2012.
  8. "I Take Out All My Frustration Through Singing, Says Rekha Bhardwaj - NDTV Movies" (in en). NDTVMovies.com. 2015-06-27 இம் மூலத்தில் இருந்து 3 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003030200/http://movies.ndtv.com/music/i-take-out-all-my-frustration-through-singing-says-rekha-bhardwaj-775892. 
  9. "Filmfare Awards 2015: 2 States, Haider Lead Nominations - NDTV Movies" (in en). NDTVMovies.com. 2015-01-20 இம் மூலத்தில் இருந்து 3 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003030455/http://movies.ndtv.com/bollywood/filmfare-awards-2015-haider-queen-lead-nominations-729745. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_பரத்வாஜ்&oldid=3588056" இலிருந்து மீள்விக்கப்பட்டது