சந்தோஷ் அலாவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்தோஷ் அலாவத்
संतोष अहलावत
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
முன்னவர் சிஸ் ராம் ஓலா
தொகுதி சுன்சுனூ
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 6, 1963( 1963-07-06)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சுரேந்திர சிங் அலாவத்
இருப்பிடம் சுலாஜ்கட், சுன்சுனூ,  ராஜஸ்தான்
படித்த கல்வி நிறுவனங்கள் ராஜஸ்தான் பல்கலைக்கழகம்
தொழில் அரசியல்வாதி , சமூக சேவகர்
சமயம் Hindu

சந்தோஷ் அலாவத் (பிறப்பு: 1965) என்பவர் இந்தியப்  பெண் அரசியல்வாதி ஆவார். மக்களவைக்கு 2014 ல் ராஜஸ்தானில் உள்ள சுன்சுனூ மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சுராஜ்கட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பட்டப்படிப்பை படித்துள்ள இவர் 2014 ஆம் ஆண்டு மே 16 முதல் சுன்சுனூ தொகுதியல் 2.34 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரானார்.

ஆசிரியராக பணியைத் தொடங்கிய இவர் கல்வித்துறையில் பல பணிகளைச் செய்துள்ளார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_அலாவத்&oldid=2694515" இருந்து மீள்விக்கப்பட்டது