சந்தோஷ் அலாவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோஷ் அலாவத்
संतोष अहलावत
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
முன்னையவர்சிஸ் ராம் ஓலா
தொகுதிசுன்சுனூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1963-07-06)6 சூலை 1963
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுரேந்திர சிங் அலாவத்
வாழிடம்(s)சுலாஜ்கட், சுன்சுனூ,  ராஜஸ்தான்
முன்னாள் கல்லூரிஇராசத்தான் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி , சமூக சேவகர்

சந்தோஷ் அலாவத் (Santosh Ahlawat) (பிறப்பு: 1965) என்பவர் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். மக்களவைக்கு 2014 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள சுன்சுனூ மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]  ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சுராஜ்கட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பட்டப்படிப்பை படித்துள்ள இவர் 2014 ஆம் ஆண்டு மே 16 முதல் சுன்சுனூ தொகுதியில் 2.34 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரானார்.

ஆசிரியராக பணியைத் தொடங்கிய இவர் கல்வித்துறையில் பல பணிகளைச் செய்துள்ளார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in.
  2. "Santosh Ahlawat New MLA SurajgarhThe Bihar Times". Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_அலாவத்&oldid=3791612" இலிருந்து மீள்விக்கப்பட்டது