உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரகுப்த சாணக்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகுப்த சாணக்யா
இளவரசி 'சாயா'வாக என். சி. வசந்தகோகிலம்
இயக்கம்சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்)
தயாரிப்புசி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்)
மூலக்கதைசந்திரகுப்த மௌரியர் வரலாறு
திரைக்கதைசி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்)
இசைபாபநாசம் சிவன்
நடிப்புபவானி கே. சாம்பமூர்த்தி
என். சி. வசந்தகோகிலம்
ப்ரஹதாம்பாள்
டி. கே. கல்யாணம்
எஸ். எஸ். கொக்கோ
பி. சாரதாம்பாள்
ஒளிப்பதிவுஎஸ். தாஸ்
கலையகம்ட்ரினிட்டி தியேட்டர்ஸ்
வெளியீடுஆகத்து 24, 1940 (1940-08-24)(இந்தியா) -->
ஓட்டம்14,000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்திரகுப்த சாணக்யா (Chandraguptha Chanakya) என்பது ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சி. கே. சச்சி (சி. கே. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1][2]

திரைக்கதை

[தொகு]

மௌரிய பேரரசைத் தோற்றுவித்தவர் சந்திரகுப்தர். அவரது ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அர்த்தசாஸ்திரம் என்னும் அரசியல் நூலை எழுதிய கௌடில்யர் தான் சாணக்கியர் என பாரம்பரியமாக சொல்லப்படுகிறது. இவர்களின் வரலாறே இந்தத் திரைப்படமாகும் [1]

நடிகர்கள்

[தொகு]

இதில் இடம்பெற்ற நடிகர்களின் பட்டியில் தி இந்து இதழில் இருந்து எடுக்கபட்டன.[1]

தயாரிப்பு

[தொகு]

இப்படத்தை கோயமுத்தூரைச் சேர்ந்த சி. கே. சச்சி இயக்கினார். எழுத்தாளர் கே. ஆர். நாராயணனின் உறவினர் இவராவார். அக்காலத்தில் பிரபல கருநாடக இசைப்பாடகியாக இருந்த என். சி. வசந்தகோகிலம் நடித்த முதல் படமாகும். இது ஒரு வரலாற்றுப் படம் என்பதால் படத்துக்கான ஒப்பணை சாதனங்கள், நகைகள் போன்றவை இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்டன. இப்படத்திற்கு எஸ். எஸ். தாஸ் ஒளிப்பதிவை மேற்கொண்டார். அக்காலக்கடத்தில் சில படங்களுக்கு இரண்டு பெயர்கள் வைக்கும் வழக்கம் இருந்தது. அதைப் போல இப்படத்திற்கு சந்திரகுப்த சாணக்யா (அல்லது) தறுதலை தங்கவேலு என்ற தலைப்பு இடப்பட்டது.

பாடல்கள்

[தொகு]

திரைப்படத்துக்கு பாபநாசம் சிவன் இசையமைத்தார். தங்களுக்கான பாடல்களை இளவரசி சாயா பாத்திரத்தில் நடித்த என். சி. வசந்தகோகிலமும், சந்திரகுப்தரான நடித்த பவானி கே. சாம்பமூர்த்தியும் பாடினார்.[1]

வெளியீடு

[தொகு]

இப்படம் 1940 ஆகத்து 24 அன்று வெளியானது. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "Chandragupta Chanakya 1940". தி இந்து. காம். மே 8, 2009. Retrieved 14 அக்டோபர் 2016.
  2. Film News Anandan (2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2016-10-18. Retrieved 2016-10-14. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. இங்கிலாந்தில் இருந்து வந்த மேக்கப் சாதனங்கள்! - சந்திரகுப்த சாணக்கியா (அல்லது) தறுதலை தங்கவேலு, செ. ஏக்நாத்ராஜ், இந்து தமிழ் திசை, 25 ஆகத்து 2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகுப்த_சாணக்யா&oldid=4485621" இலிருந்து மீள்விக்கப்பட்டது