சந்தனா பௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தனா பௌரி
Chandana Bauri
உறுப்பினர் மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்சுவபன் பௌரி
தொகுதிசால்டோரா சட்டப்பேரவை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1990/1991 (அகவை 32–34)[1]
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்சிரபன் பௌரி
வாழிடம்(s)கிராமம் கேலாய், பி.ஓ.பிசிந்தா, பி.எசு. கங்காசல் காடி, மாவட்டம்-பாங்குரா, மேற்கு வங்காளம்
தொழில்அரசியல்வாதி

சந்தனா பௌரி (Chandana Bauri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் மேற்கு வங்காள அரசியலில் செயல்பட்டார்.[2][3] சந்தனா பௌரி 2014 ஆம் ஆண்டு முதல் சால்டோராவில் தீவிர பாரதிய சனதா கட்சியின் செயலாளராக இருந்து வந்தார். 2021 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சந்தோசு குமார் மொண்டலை 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்டித்து சால்டோரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6] தினசரி கூலித் தொழிலாளியின் 30 வயது மனைவியான பௌரி மூன்று பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission of India". affidavit.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  2. "Chandana Bauri: BJP candidate Chandana Bauri, wife of mason, wins Saltora". The Times of India (in ஆங்கிலம்). 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  3. Roy, Suryagni (March 25, 2021). "Bengal elections: Wife of daily-wage labourer, Chandana Bauri is BJP's candidate from Saltora". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  4. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  5. "Saltora Election Result 2021 Live Updates: Chandana Bauri of BJP wins". www.news18.com (in ஆங்கிலம்). 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  6. "BJP's Chandana Bauri, Wife Of Daily Wage Labourer, Wins Saltora". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனா_பௌரி&oldid=3874056" இலிருந்து மீள்விக்கப்பட்டது