சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக் | |
|---|---|
| மேகாலயா ஆளுநர் | |
| பதவியில் 18 ஆகஸ்ட் 2020 – 3 அக்டோபர் 2022 | |
| முன்னையவர் | ததகதா ராய் |
| கோவா ஆளுநர் | |
| பதவியில் 03 நவம்பர் 2019 – 18 ஆகஸ்ட் 2020 | |
| முன்னையவர் | மிருதுளா சின்கா |
| பின்னவர் | பகத்சிங் கோசியாரி (கூடுதல் பொறுப்பு) |
| ஜம்மு காஷ்மீர் ஆளுநர் | |
| பதவியில் 23 ஆகஸ்ட் 2018 – 30 அக்டோபர் 2019 | |
| பீகார் ஆளுநர் | |
| பதவியில் 30 செப்டம்பர் 2017 – 21 ஆகஸ்ட் 2018 | |
| முன்னையவர் | கேசரிநாத் திரிபாதி |
| பின்னவர் | லால்ஜி டாண்டன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | பிரித்தானிய இந்தியா[1] தற்போதைய பாகுபத் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா சூலை 1946 (அகவை 79) மீரட் மாவட்டம், ஐக்கிய மாகாணம் |
| இறப்பு | பிரித்தானிய இந்தியா[1] தற்போதைய பாகுபத் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| இளைப்பாறுமிடம் | பிரித்தானிய இந்தியா[1] தற்போதைய பாகுபத் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| பெற்றோர் |
|
சத்ய பால் மாலிக்(பிறப்பு: ஜூலை 24, 1946-5 ஆகஸ்ட் 2025) பீகார், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், கோவா மற்றும் மேகாலயா ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். ஒரு அரசியல்வாதியாக 1974–77 காலகட்டத்தில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். 1980 முதல் 1986 மற்றும் 1986–89 வரை மாநிலங்களவையில் உத்தரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1989 முதல் 1991 வரை ஜனதா தளத்தின் உறுப்பினராக அலிகர் மக்களவைத் தொகுதியின் ஒன்பதாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். அக்டோபர் 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரை பீகார் ஆளுநராக இருந்தார்.[2][3]
மார்ச் 21, 2018 அன்று, இவருக்கு ஒடிசாவின் ஆளுநராக 28 மே 2018 வரை பணியாற்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2018 இல், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் அதன் 10வது மற்றும் கடைசி ஆளுநராக ஆனார். இவர் அக்டோபர் 2019 வரை அங்கு பணியாற்றினார். இவரது பதவிக் காலத்தில், ஆகஸ்ட் 2019 இல், மாநிலத்தின் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டது. பின்னர், கோவாவின் 18வது ஆளுநரானார். அதன் பின்னர் அக்டோபர் 2022 வரை மேகாலயாவின் 21வது ஆளுநராகவும் பணியாற்றினார்.[4][5]
இளமை வாழ்க்கை
[தொகு]சத்ய பால் மாலிக் ஜூலை 24, 1946 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தின் மீரட் மாவட்டத்தில் (தற்போது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பாகுபத் மாவட்டத்தில் உள்ளது) இசாவாடா என்ற கிராமத்தில் ஒரு இந்து ஜாட் குடும்பத்தில் பிறந்தார்.[6][7][8]
மாலிக் சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை மற்றும் சட்ட இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார்.[9] 1968–69 ஆம் ஆண்டில், மாலிக் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[10]
நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட மாலிக் ஆகஸ்ட் 5, 2025 அன்று தனது 79 வயதில் இறந்தார்.[11]
அரசியல்
[தொகு]சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் உறுப்பினரான மாலிக் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, பாகுபத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக முதன்முதலில் பொதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பதிவான வாக்குகளில் 42.4% பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஆச்சார்யா தீபங்கரை தோற்கடித்து தேர்தலில் வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 31.6% வாக்குகளைப் பெற்றார்.[12] பின்னர், பாரதிய லோக் தளம் உருவான பிறகு, அக்கட்சியில் சேர்ந்து லோக் தளத்தின் பொதுச் செயலாளரானார்.[13]
தேசிய அரசியல்
[தொகு]- 1980–89: உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்
- 1989–91: ஜனதா தளம் சார்பில் அலிகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினர்
- 1996: சமாஜ்வாதி கட்சி சார்பில் அலிகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினர்.[14]
- 2012: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத்தலைவர்[15]
மாநிலங்களின் ஆளுநர்
[தொகு]- 30 செப்டம்பர் 2017 – 21 ஆகஸ்ட் 2018:பீகார் ஆளுநர்
- 21 மார்ச் 2018 – 28 ஆகஸ்ட் 2018: ஒடிசா ஆளுநராக கூடுதல் பொறுப்பு
- 23 ஆகஸ்ட் 2018 – 30 அக்டோபர் 2019: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
- 3 நவம்பர் 2019 – 18 ஆகஸ்ட் 2020: கோவா ஆளுநர்
- 18 ஆகஸ்ட் 2020 – 3 அக்டோபர் 2022: மேகாலயா ஆளுநர்
அரசியல் பார்வை
[தொகு]விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு
[தொகு]நவம்பர் 8, 2021 அன்று, மாலிக் உலகளாவிய ஜாட்டுகளின் உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். மேலும் தனது உரையில்,2020–2021 இந்திய விவசாயிகளின் போராட்டத்தை கையாள்வது குறித்து இந்திய அரசாங்கத்தை குறை கூறினார்.[16][16][17]
புல்வாமா தாக்குதல் மற்றும் நரேந்திர மோடி பற்றிய பார்வைகள்
[தொகு]ஏப்ரல் 14, 2023 அன்று, கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், புல்வாமா தாக்குதல் 2019 மற்றும் நரேந்திர மோதி குறித்து மாலிக் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.[18]
- நரேந்திர மோடிக்கு ஊழல் மீது எந்த அக்கறையும் இல்லை. மேலும் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முன்னாள் ஜம்மு-காஷ்மீடின் ஆளுநர், 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு வழிவகுத்த தவறுகள் குறித்து கடுமையான கூற்றுக்களையும் முன்வைத்தார். அதில் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அந்த நேரத்தில் தவறுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் தாக்குதலின் அனைத்துப் பொறுப்பும் பாகிஸ்தான் மீது சுமத்தப்படும் என்பதையும் தான் உணர்ந்ததாகவும் கூறினார்.[19]
- இவ்வளவு பெரிய கான்வாய் பொதுவாக சாலை வழியாக பயணிக்க முடியாத காரணத்தால், மத்திய சேமக் காவல் படைவீரர்களை ஏற்றிச் செல்ல விமானம் கேட்டிருந்தனர் என்றும் மாலிக் கூறினார். இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றும் ஆனால் அவர்கள் விமானம் கொடுக்க மறுத்துவிட்டனர் என்றும் கூறினார்.
- புல்வாமா சம்பவத்தில் உளவுத்துறை கடுமையாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் மாலிக் கூறினார். ஏனெனில் 300 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளது. ஆனால் சம்மு காசுமீரின் சாலைகள் மற்றும் கிராமங்களில் 10-15 நாட்கள் யாரும் கண்டுபிடிக்கப்படாமலும், யாருக்கும் தெரியாமலும் பயணித்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "9th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 1 October 2017. Retrieved 30 September 2017.
- ↑ "New governors appointed: All you need to know". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 September 2017. Archived from the original on 13 June 2018. Retrieved 30 September 2017.
- ↑ "Who is Satya Pal Malik?". இந்தியன் எக்சுபிரசு. 30 September 2017. Archived from the original on 30 September 2017. Retrieved 30 September 2017.
- ↑ PTI (18 August 2020). "Satya Pal Malik Appointed Meghalaya Governor, to Replace Tathagata Roy". News18 இம் மூலத்தில் இருந்து 26 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200926225428/https://www.news18.com/news/india/satya-pal-malik-appointed-meghalaya-governor-to-replace-tathagata-roy-2797255.html.
- ↑ "Satya Pal Malik: Have no plans to join active politics". October 2022. Archived from the original on 5 October 2022. Retrieved 5 October 2022.
- ↑ "Mali, Shri Satya Pal" (PDF). p. 7. Archived (PDF) from the original on 5 March 2016. Retrieved 22 August 2018.
- ↑ "In Kashmir, governors kill time boozing and golfing: Satyapal Malik". Kashmir Walla. 15 March 2020. Archived from the original on 16 May 2021. Retrieved 18 February 2022.
- ↑ Tripathi, Vineet (23 November 2021). "Satya Pal Malik News: सिख और जाट 300 साल नहीं भूलते...गवर्नर सत्यपाल मलिक का वीडियो देख लोग बोले- उकसा क्यों रहे". Navbharat Times இம் மூலத்தில் இருந்து 18 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220218175705/https://navbharattimes.indiatimes.com/india/satya-pal-malik-governor-of-meghalaya-anchor-sushant-sinha-live-debate-chhor-kar-bhage-watch-viral-video/articleshow/87870177.cms.
- ↑ "Who is Satya Pal Malik?" (in en). The Indian Express. 22 August 2018 இம் மூலத்தில் இருந்து 9 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220909173548/https://indianexpress.com/article/who-is/who-is-satya-pal-malik-bihar-governor-4868075/.
- ↑ "Bihar Governor Satpal Malik visits Meerut College". The Statesman. 16 November 2017 இம் மூலத்தில் இருந்து 15 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230415004234/https://www.thestatesman.com/cities/bihar-governor-satpal-malik-visits-meerut-college-1502529584.html.
- ↑ Bhardwaj, Amit (5 August 2025). "Former J&K Governor Satyapal Malik dies at 79 after prolonged illness". India Today. Retrieved 5 August 2025.
- ↑ "Baghpat Assembly Constituency Election Result – Legislative Assembly Constituency". resultuniversity.com. Archived from the original on 17 November 2022. Retrieved 17 November 2022.
- ↑ "Members Bioprofile". 164.100.47.194. Archived from the original on 1 October 2017. Retrieved 17 November 2022.
- ↑ "Rediff On The NeT: Polling Booth: Election' 96: Uttar Pradesh/Aligarh". Rediff.com இம் மூலத்தில் இருந்து 28 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220628150819/https://www.rediff.com/news/1998/feb/up76.htm.
- ↑ Shekhar, Kumar Shakti (27 October 2021). "Satya Pal Malik: When Satya Pal Malik courted controversies as governor – from Bihar, Jammu-Kashmir and Goa to Meghalaya". The Times of India இம் மூலத்தில் இருந்து 17 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220817003941/https://timesofindia.indiatimes.com/india/when-satya-pal-malik-courted-controversies-as-governor-from-bihar-jammu-kashmir-and-goa-to-meghalaya/articleshow/87299818.cms.
- ↑ 16.0 16.1 "WATCH: Twitterati trend #SackSatyapalMalik as they slam Governor for remarks on 'Indira Gandhi assassination' in viral video". Free Press Journal. 23 November 2021 இம் மூலத்தில் இருந்து 25 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220325043050/https://www.freepressjournal.in/viral/watch-twitterati-trend-sacksatyapalmalik-as-they-slam-governor-for-remarks-on-indira-gandhi-assassination-in-viral-video.
- ↑ SYL Sidhu Moose Wala (Official Video) | Ohna Chir Paani Chado Tupka Ni Dinde | New Punjabi Song 2022 (in ஆங்கிலம்), retrieved 19 February 2024
- ↑ "'Modi Has No Problem With Corruption, Is Ignorant on Kashmir, Silenced Me On Pulwama Laparvahi'". The Wire. Archived from the original on 15 April 2023. Retrieved 16 April 2023.
- ↑ Hussain, Abid (17 April 2023). "Pakistan reacts to ex-Kashmir governor's revelations on Pulwama" (in en). Al Jazeera. https://www.aljazeera.com/news/2023/4/17/pakistan-reacts-to-ex-kashmir-governors-revelations-on-pulwama.