சத்தியேந்திர குமார் ஜெயின்
சத்தியேந்திர குமார் ஜெயின் | |
---|---|
![]() | |
கெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை, தில்லி அரசு | |
பதவியில் 14 பிப்ரவரி 2015 – 28 பிப்ரவரி 2023 | |
துணைநிலை ஆளுநர் | நசீப் சங் அனில் பைஜால் வினைய் குமார் சக்சேனா |
அமைச்சரவை | கெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை |
துறைகள் |
|
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 28 டிசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014 | |
துணைநிலை ஆளுநர் | நசீப் சங் |
துறைகள் |
|
முன்னையவர் | கிரண் வாலியா |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சக்கூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 28 டிசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014 | |
முன்னையவர் | சியாம் லால் கார்க் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சக்கூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 அக்டோபர் 1964 கீர்தல் கிராமம், பாக்பாத் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | பூனம் ஜெயின் |
பிள்ளைகள் | சௌமியா ஜெயின் மற்றும் சிரேயா ஜெயின் |
கல்வி | கட்டிடக் கலைஞர் |
பணி | அரசியல்வாதி |
உடைமைத்திரட்டு | சுகாதாரம் & குடும்ப நலம், தொழில்கள், உள்துறை, மின்சாரம், குடிநீர், நகர்புற வளர்ச்சி |
சத்தியேந்திர குமார் ஜெயின் (Satyendar Kumar Jain) ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் அமச்சரவையில் 28 டிசம்பர் 2013 முதல் 28 பிப்ரவரி 2023 முடிய பதவி வகித்தவர்.[1] இவர் தில்லி அரசின் சுகாதாரம் & குடும்ப நலம், தொழில்கள், உள்துறை, மின்சாரம், குடிநீர், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக செயல்பட்டவர்.
இவர் பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் 31 மே 2022 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 28 பிப்ரவரி 2023 அன்று இவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[3][4]மே 2023ல் சத்தியேந்திர குமார் ஜெயின் மீது நடுவண் புலனாய்வுச் செயலகம் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது.[5]
இடைக்கால ஜாமீன்
[தொகு]26 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பண மோசடி வழக்கில் சிறை சென்ற சத்தியேந்திர குமார் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கியது.[6] பிறகு அவர் நிரந்தர ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இதனை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் திகார் சிறைக்கு திரும்பினார்.
ஜாமீன்
[தொகு]பணமோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சத்யேந்தர் ஜெயினுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால், திகார் சிறையிலிருந்து வீட்டிற்கு திரும்பினார்.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delhi Govt Portal - Cabinet Ministers". delhi.gov.in. Government of NCT of Delhi, India. Retrieved 4 July 2015.
- ↑ Delhi Minister Satyendra Jain Withdraws Plea In Supreme Court Challenging Transfer Of Case To Another Judge, 17 October 2022
- ↑ Manish Sisodia, Satyendar Jain quit Arvind Kejriwal's cabinet, what next?
- ↑ Arrested AAP leaders Jain, Sisodia quit Delhi Cabinet
- ↑ CBI registers disproportionate assets case against Satyendar Jain
- ↑ SC grants interim bail to former Delhi Minister Satyendar Jain on medical grounds in money laundering case
- ↑ இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சத்தியேந்திர ஜெயினுக்கு ஜாமீன்