மணீஷ் சிசோடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணீஷ் சிசோடியா
ManishSisodia (cropped).jpg
2017-இல் மணீஷ் சிசோடியா
தில்லி மாநில துணை முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 பிப்ரவரி 2015
துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்
அணில் பைஜால்
வினை குமார் சக்சேனா
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
முன்னவர் புதிய பதவி உருவாக்கம்
Additional Ministries
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 பிப்ரவரி 2015
துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்
அணில் பைஜால
வினை குமார் சக்சேனா
அரவிந்த் கெஜ்ரிவாலின் மூன்றாம் அமைச்சரவையில் * நிதி
  • கல்வி
  • தொழிலாளர் நலன்
  • பொதுப்பணித்துறை
  • சுற்றுலா
  • திட்டமிடல்
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 பிப்ரவரி 2015
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதி பத்பார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
8 டிசம்பர் 2013 – 10 பிப்ரவரி 2014
முன்னவர் அணில் குமார் சௌத்திரி
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதி பத்பார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 5 சனவரி 1972 (1972-01-05) (அகவை 51)
ஹாப்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஆம் ஆத்மி கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் பாரதிய வித்தியா பவன்

மணீஷ் சிசோடியா (Manish Sisodia) (பிறப்பு: 2 பிப்ரவரி 1972) இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சியில் அரசியல்வாதி ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களில் மணீஷ் சிசோடியாவும் ஒருவர் ஆவார். இவர் 2015-ஆம் ஆண்டு முதல தில்லி மாநில துணை முதலமைச்சராக உள்ளார். மணீஷ் சிசோடியா மூன்றாவது முறையாக பத்பார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்ற உறுப்பின்ராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இவர் நிதி, கல்வி, தொழிற்கல்வி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை மற்றும் கலால் துறை அமைச்சராக உள்ளார்.[2] [3] [4]

குற்றச்சாட்டுகள்[தொகு]

சூன் 2022-இல் பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டுமானத்தில் ஊழல் புரிந்ததாக மணிஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். இக்குற்றச்சாட்டுகக்ள் மீது தில்லி லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.[5]

சூலை 2022-இல் தில்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா, தில்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை 2021-22 குறித்தும், மதுபானங்களை விற்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது மற்றும் விற்பனை உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக தில்லி மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி பி ஐ-க்கு சோதனை மேற்கொண்டனர்.[6][7] CBI is investigating the case.[8][9]தில்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில் மணீஷ் சிசோடியா முதலிடத்தில் உள்ளார்.இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி மற்றும் கணக்கு முறைகேடு உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக கவன ஈர்ப்பு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manish Sisodia – Patparganj election results: Close fight for Manish Sisodia". https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/delhi/patparganj-results-close-fight-for-manish-sisodia/articleshow/74076381.cms?from=mdr. 
  2. "Delhi deputy CM Manish Sisodia gets additional charge of PWD ministry". 23 February 2022.
  3. "Sisodia gets charge of labour, employment departments in Delhi govt". Business Standard India. Press Trust of India. 14 October 2020. https://www.business-standard.com/article/current-affairs/sisodia-gets-charge-of-labour-employment-departments-in-delhi-govt-120101401292_1.html. 
  4. "Delhi Government". http://delhi.gov.in/wps/wcm/connect/DoIT/delhi+govt/delhi+home/departments/executives/ministers. 
  5. "Newsmaker | AAP on offensive, raids against Delhi Deputy CM Manish Sisodia strike at heart of its showcase policies" (in en). The Indian Express. 19 August 2022. https://indianexpress.com/article/political-pulse/aap-cbi-raids-delhi-deputy-cm-manish-sisodia-8098909/. 
  6. "Delhi L-G recommends CBI probe into AAP's new Excise Policy, cites violation of rules, procedural lapses". Financialexpress (ஆங்கிலம்). 2022-08-19 அன்று பார்க்கப்பட்டது.
  7. "CBI Raids Delhi Deputy Chief Minister Manish Sisodia Over Liquor Policy". NDTV.com. 2022-08-19 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Manish Sisodia among 15 persons named in CBI’s FIR on alleged excise scam in Delhi". Scroll.in. 19 August 2022. https://scroll.in/latest/1030868/manish-sisodia-among-15-persons-named-in-cbis-fir-on-alleged-excise-scam. 
  9. Anand, Jatin (August 19, 2022). "Centre trying to derail Delhi’s health, education revolution: Kejriwal". https://www.thehindu.com/news/cities/Delhi/centre-trying-to-derail-delhis-health-education-revolution-kejriwal/article65788671.ece. 
  10. மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச்செல்ல தடை: அடுத்த அதிரடியில் இறங்கியது சிபிஐ!
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணீஷ்_சிசோடியா&oldid=3589219" இருந்து மீள்விக்கப்பட்டது