சதலவாடா கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதலவாடா கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு1 மே 1948 (1948-05-01) (அகவை 75)
நாயுடுபேட்டை
தேசியம் இந்தியா
பணிஅரசியல்வாதி, சமூக ஆர்வலர்
அரசியல் கட்சி
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் தலைவர்
வாழ்க்கைத்
துணை
சுசரிதா
பிள்ளைகள்3

சதலவாடா கிருஷ்ணமூர்த்தி (Chadalawada Krishnamurthy) (பிறப்பு 1 மே 1948) ஒரு இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு திருப்பதி சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். [2] திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சதலவாடா கிருஷ்ணமூர்த்தி 1948 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நெல்லூர் மாவட்டம் சென்னூர் கிராமத்தில் வெங்கட சுப்பண்ணா மற்றும் வெங்கட ரமணம்மா ஆகியோருக்கு பிறந்தவர். இவர் முனைவர் பட்டம் பெற்ற முதுகலைப் பட்டதாரியாவார். சதலவாடா அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

மறைந்த திருமதி இந்திரா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டடு 1973 இல் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 1976 முதல் 1977 வரை சஞ்சய் காந்தி தலைமையில் நெல்லூர் மாவட்ட இளைஞர் காங்கிரசு தலைவராக இருந்தார். இவர் 1981 தேர்தலில் நாயுடுபேட்டை கிராம ஊராட்சிக்கானத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1994 தேர்தலில் திருப்பதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்தார். ஆனால் கட்சி இவரை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் போட்டியிடச் சொன்னது. தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு தேர்தலில் 1580 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் 1999 தேர்தலில் திருப்பதியில் மீண்டும் போட்டியிக் கோரினார். மீண்டும் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர், தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து 1999 ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் திருப்பதி தொகுதியில் 15000 வாக்குகள் பெரும்பான்மை பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4] [5] [6]

பதவிகள்[தொகு]

ஆந்திரப் பிரதேச அரசு 27 ஏப்ரல் 2015 அன்று சதலவாடா கிருஷ்ணமூர்த்தியை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் தலைவராக நியமித்தது.[7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Hindu (22 October 2018). "Chadalawada defends joining JSP" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 9 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220109072919/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/chadalawada-defends-joining-jsp/article25281302.ece. பார்த்த நாள்: 9 January 2022. 
  2. "Former MLA to re-join Congress". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/former-mla-to-rejoin-congress/article1961426.ece. 
  3. "Tirupati (Andhra Pradesh) Assembly Constituency Elections". பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  4. "Andhra Pradesh Assembly Election Results in 1999". பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  5. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1999 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ANDHRA PRADESH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  6. "A blast and its shock". http://www.frontline.in/static/html/fl2021/stories/20031024004001800.htm. 
  7. "Chadalavada new TTD Chairman". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/chadalavada-new-ttd-chairman/article7148611.ece. பார்த்த நாள்: 21 November 2015. 
  8. "AP Government appointed Chadalavada Krishnamurthy as Chairman of TTD". http://www.jagranjosh.com/current-affairs/ap-government-appointed-chadalavada-krishnamurthy-as-chairman-of-ttd-1430207727-1. பார்த்த நாள்: 23 November 2015.