சட்டுவாந்தாங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சத்துவந்தாங்கல் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இடக் குறியீடு | 04182 |
சத்துவந்தாங்கல் (Sattuvanthangal) இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமமானது திருவண்ணாமலை மாவட்டத்தின், வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து கிராமத்தில் 64 கிராம பஞ்சாயத்து கீழ் அமைந்துள்ளது. இது பாலாறு நதி கரைக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. சத்துவந்தாங்கல் என்ற வார்த்தை "சக்தி வந்து தாங்கள்", சொற்றொடர் அதாவது, "தேவி ஸ்ரீ துர்கை அம்மன்" என்ற பெயராகும்.
விளக்கப்படங்கள்
[தொகு]2001 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி, 998 குடும்பங்கள், 3288 மக்கள் வசிக்கின்றனர். பெண் மற்றும் ஆண் பாலின விகிதம் 1:0.9 ஆகும். இக்கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 69.77% ஆக இருந்தது.
பொது சேவைகள்
[தொகு]தபால் அலுவலகம்
[தொகு]ராணிபேட் தலைமை அலுவலகத்தின் கீழ் சட்டுவாந்தாங்கள் கிராம கிளை தபால் அலுவலகம் வருகிறது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீடு "632511" ஆகும். இத்துடன் சேர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 5 கிளை அலுவலகங்கள் வருகிறது. அதாவது வடஇலுப்பை, தென்னாம்பட்டு, சட்டுவந்தங்கள், புலிவலம் - சுனைபட்டு,நாட்டேரி & வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 கிளை அலுவலகங்கள் சக்கரமல்லூர், ஆனந்தங்கள், ஜகிர்வளவனுர் மற்றும் இசயனூர் போன்றவையாகும்.
காவல் நிலையம்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்தில் கிராம பஞ்சாயத்தில் சட்டுவாந்தாங்கள் காவல் நிலையம் அமைந்துள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இந்த காவல் நிலையம் உள்ளது.
வங்கி
[தொகு]இக்கிராமத்தில் கோசா தெருவில் இந்திய ஓவர் சீஸ் வங்கி-கிளை அமைந்துள்ளது.