சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி கட்சி)
Appearance
சஞ்சய் சிங் | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர்கள் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 சனவரி 2018 | |
குடியரசுத் தலைவர் | |
முன்னையவர் | கரண் சிங் |
தொகுதி | தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 மார்ச்சு 1972 சுல்தான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சமாஜ்வாதி கட்சி (2007 வரை) |
துணைவர் | அனிதா சிங் |
பிள்ளைகள் | 2 |
கல்வி | சுரங்கப் பொறியல் பட்டயம் |
தொழில் | அரசியல்வாதி |
சஞ்சய் சிங் (Sanjay Singh) (பிறப்பு: 22 மார்ச் 1972) இந்திய மாநிலங்களவை உறுப்பினரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், உத்தரப் பிரதேசம், ஒடிசா, இராஜஸ்தான் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளரும் ஆவார். இவர் 2007 முடிய சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். பின்னர் நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சி துவக்கும் போது அதன் கொள்கை முடிவு எடுக்கும் அரசியல் குழுவில் இருந்தார்.
கைது
[தொகு]தில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சஞ்சய் சிங் வீட்டை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 4 அக்டோபர் 2023 அன்று சோதனையிட்டனர்.[1] 6 அக்டோபர் 2023 அன்று சஞ்சய் சிங்கை அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.[2]