சஜரக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரிய சராய்கி சஜாரக்

சஜரக் (Sajarak) என்பது சராய்கி அஜ்ராக் என்றும் அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானின் தெற்கு பஞ்சாபில் பெரும்பாலும் காணப்படும் கட்டையாலச்சடித்தல் எனும் தனித்துவமான வடிவமாகும். இது சராய்கி கலாச்சாரம் மற்றும் மரபுகளின் அடையாளமாக மாறியுள்ளது. மார்ச் 6 அன்று, சராய்கி பண்பாட்டுத் தினம் கொண்டாடப்படுகிறது.[1][2][3]

விளக்கம்[தொகு]

சஜரக்கின் தோற்றம் சராக்கிகளிடையே சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இதை அஜ்ரக்கின் ஒரு வடிவமாகக் கருதுகின்றனர்.

சஜரக் என்பது பாக்கித்தானின் சிந்துவில் காணப்படும் கட்டையாலச்சடித்தல் முறையில் நெசவு செய்யப்பட்ட சால்வைகள் மற்றும் ஓடுகள் ஆகும். இவை பாக்கித்தானின் சிந்துவில் காணப்படுகிறது.

சஜாரக்கை சரைகிஸ்தான் மற்றும் சரக்கி மக்களின் அடையாளமாக உள்ளது. சஜ்ரக் ஆண்களுக்குப் பெருமையினையும் மரியாதையினையும் தருவதோடு பெண்களைப் பெருமைப் படுத்துவதாக உள்ளது. சராய்கி மக்கள் தங்கள் விருந்தினர்களுக்கு விருந்தோம்பலின் பகுதியாக அஜ்ரக்கை வழங்குகிறார்கள்.

சராய்கி சஜரக்

இந்த சால்வைகள் முத்திரைகள் மூலம் கட்டையாலச்சடித்தல் முறையினைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட சிறப்பு வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களைக் காட்டுகின்றன.[4] இந்த வடிவங்களை உருவாக்கும் போது பயன்படுத்தப்படும் பொதுவான வண்ணங்கள் நீலம், சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை ஆகியவை. சராக்கி பண்பாட்டில் வெளிர் நீல நிறம் அதிகமாகப் பயன்படுகிறது. சஜராக் பெரும்பாலும் வெளிர் நீல நிறத்திலும் சில நேரங்களில் நீல நிறத்திலும் இருக்கும். வெளிர் நீல நிறம் மற்ற அஜ்ராக்களில் தனித்துவமாக்குகிறது. சராக்கி தேசியவாதிகள் சஜாரக்கை வடிவமைத்தனர். சிந்தி அஜ்ராக் நீண்ட காலத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்டது. சிலர் இதை சராய்கி அஜ்ராக் என்று அழைக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு "சஜரக்" என்ற பெயர் தான் தெரியும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saraiki Ajrak Day observed in Tank". 7 March 2021.
  2. "CM predicts opposition's defeat". 6 March 2022.
  3. "CM Punjab Felicitates Seraiki People on the Eve of Seraiki Culture Day | Punjab Portal".
  4. Ahmed Dharija, Zahoor. "Saraiki Festival Aur Ajrak". urducolumnsonline.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜரக்&oldid=3661036" இலிருந்து மீள்விக்கப்பட்டது