சங்கர் கிருட்டிணமூர்த்தி
சங்கர் கிருட்டிணமூர்த்தி | |
|---|---|
| பிறப்பு | நங்கவரம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகர், வழக்குரைஞர் |
சங்கர் கிருட்டிணமூர்த்தி என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் நங்கவரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியாளரும், மேலாண்மை ஆலோசகரும், வழக்குரைஞருமாவார்.[1] இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு, திரைத்துறையில் திரைக்கதை உதவியாசிரியராகவும், திரைப்படங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.[2]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சங்கர் கிருட்டிணமூர்த்தி தமிழ்நாட்டிலுள்ள திருச்சி மாவட்டத்திலுள்ள நங்கவரம் எனும் ஊரில் பிறந்தார். சென்னையில் வளர்க்கப்பெற்று, இளங்கலை பொறியியல் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மை ஆகியவற்றை பெங்களூரில் பயின்றார். மேலும், பெங்களூரிலுள்ள தேசிய சட்டக்கல்லூரி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை பயின்றதுடன் வணிக சட்டங்களை சிறப்புப் பாடமாக தேர்ந்தெடுத்து பட்டம் பெற்றார்.
வாழ்க்கை
[தொகு]பெங்களூரிலுள்ள தூர்தர்ஷனில் தொகுப்பாளராக தன்னுடைய ஊடகப்பணியைத் துவங்கினார். திரைப்படங்களிலும் நடிக்கத் துவங்கினார். 2006 ஆம் ஆண்டு வெளியான காதலே என் காதலே திரைப்படத்தில் சிறு வேடமேற்று நடித்தார். இப்படம் 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்களால் சிறப்பு விருதினைப் பெற்றது. பல திரைப்படங்களுக்கு திரைக்கதை உதவியாசிரியராகவும் பணியாற்றிய இவர், 2012 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் திரைப்படத்தில் நடித்தார்[3]. அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்திலும் சிறு வேடத்தில் நடித்தார். இயக்குநர் மோ.இராஜாவின் தனி ஒருவன் திரைப்படத்திற்கு திரைக்கதை ஆலோசகராகவும் பணியாற்றினார்.
திரை வரலாறு
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | மொழி |
|---|---|---|
| 2015 | அனேகன் | தமிழ் |
| 2012 | மாற்றான் | தமிழ் |
| 2006 | காதலே என் காதலே | தமிழ் |
| ஆண்டு | திரைப்படம் | மொழி |
|---|---|---|
| 2015 | தனி ஒருவன் | தமிழ் |
| 2014 | ஒரு ஊருல இரண்டு இராஜா | தமிழ் |
| 2013 | வன யுத்தம் | தமிழ் |
வாழ்க்கை
[தொகு]சங்கர் கிருட்டிணமூர்த்தி தற்சமயம் சட்ட ஆலோசகராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு இதழ்களிலும், செய்திதாள்களிலும் இவர் கட்டுரைகள் எழுதியுள்ளன.