காதலே என் காதலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காதலே என் காதலே
இயக்கம்பி.சி.சேகர்
தயாரிப்புபி. மாரிக்குமார்
பி.ரமேஷ்குமார்
பி.குமார்
எஸ். ராஜேந்திரநாத்
கதைபி.சி.சேகர்
இசைபிரயோக்
நடிப்புநவீன்
ஸ்ருதா கீர்த்தி
ரோமா அஸ்ராணி
ஒளிப்பதிவுவைத்தி.எஸ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்சி.ஆர்.எம். புரொடக்சன்ஸ்
வெளியீடுஆகத்து 4, 2006 (2006-08-04)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதலே என் காதலே (Kadhale en kadhale) 2006 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் பி.சி.சேகர் இயக்கத்தில், நவீன் மற்றும் ஸ்ருதா கீர்த்தி நடிப்பில், பிரயோக் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் 2006 ஆம் ஆண்டுக்கான பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றது.[1][2][3][4]

கதைச்சுருக்கம்[தொகு]

ராஜிவ் (நவீன்) பணக்கார தம்பதிகளின் (ராமகிருஷ்ணா மற்றும் சித்ரா செனாய்) மகன். அங்குள்ள கல்லூரியில் சேரும் அவர்களது குடும்ப நண்பரின் மகள் கிருத்திகா (ரோமா அஸ்ராணி) ராஜீவின் வீட்டில் வந்து தங்குகிறாள். கல்லூரியில் ராஜிவ், பிரகதியைக் (ஸ்ருதா கீர்த்தி) காதலிக்கிறான். கிருத்திகா கல்லூரி விடுதியில் சென்று தங்குகிறாள். அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவளை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் ராஜீவைக் காதலிக்கத் தொடங்குகிறாள் கிருத்திகா. ஆனால் ராஜிவ் பிரகதியின் நட்பால் கவரப்படுகிறான். தன் காதலை பிரகதியிடம் சொல்லத் தயங்கும் ராஜிவ் அதை கிருத்திகாவிடம் மனம்விட்டுக் கூறுகிறான். இதைக்கேட்டு கிருத்திகா மனமுடைகிறாள். கல்லூரி இறுதிநாளில் ராஜிவ் பிரகதியிடம் தன் காதலைச் சொல்கிறான். ஆனால் பிரகதி அவன் காதலை ஏற்க மறுக்கிறாள்.

சிங்கப்பூரில் வேலை கிடைப்பதால் அங்கு செல்கிறான் ராஜிவ். மீண்டும் இந்தியா திரும்பும் ராஜிவிற்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. அமெரிக்கா செல்வதற்கு முன் அவனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கும் பெற்றோர் அவனைப் பெண் பார்க்க அழைத்துச் செல்கின்றனர். அவனது முன்னாள் காதலி பிரகதியே அந்தப் பெண். அவளைத் திருமணத்தை மறுக்கிறான் ராஜிவ். அவன் காதலை புறக்கணித்ததற்காக ராஜிவிடம் மன்னிப்பு கேட்கிறாள் பிரகதி.

இதனால் மனம் மாறும் ராஜிவ் பிரகதியைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவாகிறது. ராஜிவின் மீதான தன் காதலை தெரிவிக்காமல் கிருத்திகா, தான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறாள். கிருத்திகாவின் காதலைப் பற்றி அறியும் பிரகதி, அதைப் பற்றி ராஜிவிடம் சொல்கிறாள். ராஜிவ் - கிருத்திகா திருமணம் செய்துகொள்ள தன் காதலைத் தியாகம் செய்கிறாள்.

நடிகர்கள்[தொகு]

 • நவீன் - ராஜிவ்
 • ஸ்ருதா கீர்த்தி - பிரகதி
 • ரோமா அஸ்ராணி - கிருத்திகா
 • ராமகிருஷ்ணா - ராஜிவ் தந்தை
 • சித்ரா செனாய் - ராஜிவ் தாய்
 • அவினாஷ் - மகேந்திரன்
 • விஜயலட்சுமி - ஷாலினி
 • ஜிஜு - ஜிஜு
 • ரவிராஜ் - சுந்தரம்
 • சதிஷ்
 • கே. அஜய்
 • சங்கர்
 • சோனியா
 • பேபி தீபிகா

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் பிரயோக். பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.[5]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 அன்றொரு தாய் ஸ்ரீராம் பார்த்தசாரதி 3:29
2 நிஜமாய் நிஜமாய் மாணிக்க விநாயகம் 3:34
3 இது என்ன பரத்வாஜ் 5:23
4 கதவை திறந்து கார்த்திக் 2:36
5 கண்ணைக்கட்டி செந்தில்தாஸ் 2:19
6 ஒரு துளி இரு துளி எஸ். பி. பாலசுப்ரமணியம் 5:05

மேற்கோள்கள்[தொகு]

 1. "காதலே என் காதலே".
 2. "நவீன்".
 3. "திரைப்படம்".
 4. "திரைப்படம்".
 5. "பாடல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலே_என்_காதலே&oldid=2919280" இருந்து மீள்விக்கப்பட்டது