சங்கமேசுவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கமேஸ்வரா கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது சிவபெருமானுக்கு அமைக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். இது கிருஷ்ணா மற்றும் பவானாசி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் முச்சுமாரிக்கு அருகில், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் முன் கரையில் அமைந்துள்ளது.[1] இந்தக் கோயிலின் ஒரு பகுதி நீரில் மூழ்கி, போதுமான அளவு நீர்மட்டம் குறையும் போது மேலெழுகிறது.[2] இதனால், ஆந்திர மாநிலத்தில் பிரபலமானதாக அறியப்படுகிறது. 1981 இல் ஸ்ரீசைலம் அணை கட்டப்பட்ட பிறகு இது முதன்முதலில் மூழ்கியது. மேலும் 2003 இல் முதலில் தோன்றியது.

இங்கு, சங்கமேஸ்வரம் என்ற பெயரில், மரத்தால் செய்யப்பட்ட லிங்கம், பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜா அவர்கள் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா கோவிலுக்கு வருகை தந்த போது நிறுவியதாக நம்பப்படுகிறது. இந்த கோயில், ஏழு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டதால், இரண்டு மாதங்கள் வரை இந்த கோவில் காட்சியளிக்கும் புனித இடமாக கருதப்படுகிறது.[3] பவானாசி, கிருஷ்ணா நதி, வேணி, துங்கா, பத்ரா, பீமராதி மற்றும் மலாபஹாரிணி ஆகிய ஏழு ஆறுகள் சங்கமிக்கும் இடமாக இது அமைந்துள்ளது. [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. . 30 January 2005. 
  2. . 26 December 2004. 
  3. Rao, Vyjayanthi (2013). "The FUTURE IN RUINS, Appendix=Sayalu's Song". in Stoler, Ann Laura.. Imperial Debris : On Ruins and Ruination. Duke University Press, Durham and London. பக். 317. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8223-5348-5. https://books.google.com/books?id=GBWdMEWfdEsC&q=sangameswaram&pg=PA317. 
  4. LAND AND PEOPLE of Indian State and Union Territories (In 36 Volumes), Andhra Pradesh, Volume - 2. Kalpaz Publications, Delhi. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7835-358-X. 
  5. Sajnani, Dr. Manohar (2001). Encyclopedia of Tourism Resources In India (Volume II). Kalpaz Publications, Delhi. பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7835-018-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமேசுவரம்&oldid=3844846" இலிருந்து மீள்விக்கப்பட்டது