சக்ரி (இசையமைப்பாளர்)
சக்ரி | |
---|---|
2014இல் சக்ரி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கில்லா சக்ரதார் |
பிறப்பு | கம்பளப்பள்ளி, மகபூபாபாத் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா), இந்தியா | 15 சூன் 1974
இறப்பு | 15 திசம்பர் 2014 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா | (அகவை 40)
இசை வடிவங்கள் | திரையிசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 2000–2014 |
கில்லா சக்ரதார் (Gilla Chakradhar) (15 ஜூன் 1974 - 15 டிசம்பர் 2014), தொழில் ரீதியாக சக்ரி என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படத் துறையில் பணியாற்றிய இந்திய இசையமைப்பாளரும் மற்றும் பாடகரும் ஆவார். சத்யம் (2003) படத்திற்காக தெலுங்கு - சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதையும் (2010) சிம்ஹா படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான நந்தி விருதையும் வென்றார்.
சொந்த வாழ்க்கை.
[தொகு]கில்லா சக்ரதார், தெலங்காணா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கம்பாலபள்ளியில் ஜூன் 15, 1974 இல் பிறந்தார்.[1]
தொழில் வாழ்க்கை
[தொகு]சக்ரி , சுமார் 85 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கிய பச்சி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் <i id="mwIg">சத்யம்</i> படத்திற்காக சிறந்த பாடகர் விருதையும், <i id="mwJg">சிம்ஹா</i> படத்திற்காக நந்தி விருதையும் வென்றார். ரவி தேஜா மற்றும் இயக்குநர் பூரி ஜெகந்நாத் ஆகியோருக்காக பல இசை வெற்றிகளை உருவாக்கினார். முந்தையவர்களுடன் ஒன்பது படங்களிலும், பிந்தையவர்களுடன் பத்து படங்களிலும் பணியாற்றினார்.[2]
சொந்த வாழ்க்கை
[தொகு]சக்ரி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த சிறிது காலத்திலேயே 2004 இல் சிரவானி என்பவரை மணந்தார்.[3] இவருக்கு ஒரு சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர். .
இறப்பு
[தொகு]உடற் பருமன் தொடர்பான கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த[4] சக்ரி 2014 டிசம்பர் 15 அன்று தனது தூக்கத்திலேயே இறந்தார்.[5]
சர்ச்சைகள்
[தொகு]2013 ஆம் ஆண்டில், ஒரு விருந்தில் 36 வயது பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி சக்ரி மற்றும் தயாரிப்பாளர் பருச்சூரி பிரசாத் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது."[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "మళ్లీ కూయవా గువ్వ.. | Telangana Magazine". Telangana Magazine. Archived from the original on 7 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
- ↑ "ప్రముఖ సంగీత దర్శకులు చక్రి ఇక లేరు". Janam Sakshi - Telugu Daily News Portal (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-12-15. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
- ↑ "Relatives fight over Chakri's property". The Times of India. 11 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
- ↑ "Music director Chakri dies of heart attack" (in en-IN). 2014-12-15. https://www.thehindu.com/entertainment/Music-director-Chakri-dies-of-heart-attack/article60094303.ece.
- ↑ "Veteran Music Director No More". Archived from the original on 20 February 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
- ↑ "Telugu music composer Chakri and producer Paruchuri Prasad booked for molestation". DNA India (in ஆங்கிலம்). 2013-08-06. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.