கோவா சித்ரா அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவா சித்ரா அருங்காட்சியகம், முன்னாள் போர்த்துகீசியக்காலனியாக இருந்த, தற்போது இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவில்உள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். மாக உள்ளது . இந்த அருங்காட்சியகத்தில் கோவாவின் பாரம்பரிய விவசாய தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட 4000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவா சித்ரா அருங்காட்சியகம், கோவாவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பெனாலிம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகமானது கலைஞர்-காப்பாட்சியர்-மறுசீரமைப்பாளர் விக்டர்-ஹ்யூகோ கோம்ஸ் என்பவரால் அமைக்கப்பட்டதாகும். மும்பையிலிருந்து வெளிவருகின்ற டைம் அவுட் இதழ் இந்த அருங்காட்சியகத்தை கோவாவின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்று என்று வர்ணித்துள்ளது. மேலும் இந்த சிறிய கிராமப்புற வளாகத்தில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய கருவிகள் உள்ளிட்டகருவிகள் உள்ளன என்றும், அவை கோவாவின் விவசாயத்தை மையமாகக் கொண்ட விவசாயம் மற்றும் மற்றும் தொடர்புடைய பிற பாரம்பரிய வர்த்தகங்களைச் சார்ந்தவை என்றும் கூறியுள்ளது.[1]

சேகரிப்பு[தொகு]

கோவா சித்ரா அருங்காட்சியகத்தின் தொகுப்பில் உள்ளூர் மட்பாண்டங்கள், விவசாயம் சார்ந்த கருவிகள், இசைக்கருவிகள், பண்டைய வண்டிகள் மற்றும் பல்லக்குகள் போன்றவை உள்ளன.[2] அவை கடந்த காலத்தின் பல்வேறு கட்டங்களைச் சார்ந்தவையாக அமைந்துள்ளன. மேலும் இந்த அருங்காடசியகத்தில் பல்வேறு காய்கறிகள், மூலிகைகள், மசாலா பொருட்கள், கரும்பு மற்றும் அரிசி சாகுபடி செய்வதற்கான பண்ணையின் அமைப்பைக் காட்சிப்படுத்துகிறது. இவை கடலோர மேற்கு இந்தியாவின் முக்கியமான கூறுகளாக உள்ளவையாகும்.

சுற்றுச்சூழல் சார் பயன்பாடு[தொகு]

பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி பண்ணைக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மனித கழிவுகள்கூட உயிர் வாயுவாக மாற்றப்படுகின்றன, மேலும் சூரிய சக்தியைப் பயன்படுத்திபண்ணையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

மிக உயர்ந்த சமகால அருங்காட்சியகம்[தொகு]

கோவா சித்ரா அருங்காட்சியகத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்தியாவில் "மிக உயர்ந்த சமகால அருங்காட்சியகம்" என்று மதிப்பிட்டுள்ளது.[3]

டைம் இதழ் இந்த அருங்காட்சியத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளது: "இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களில் நூற்றுக்கணக்கான உழவு கருவிகள் உள்ளன, இது விவசாயத்தின் முக்கிய இடமாக கோவா இருந்து வருவதை நிரூபிக்கின்றன. (இப்போது, சுற்றுலா மற்றும் சுரங்கமே முக்கிய தொழில்களாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்கு கோவா அண்டை மாநிலங்களை சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் உயரத்தில் நிற்கும் ஒரு கரும்புச்சாறு பிழியும் கருவி அருங்காட்சியகத்தின் முக்கியமான காட்சிப்பொருளாக உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை மீட்டெடுக்க கோம்ஸ் இரண்டு ஆண்டுகள் செலவழித்துள்ளார்." [4]

திட்டங்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகம் அதன் பார்வையாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகின்ற மையப் புள்ளியாக செயல்படத் திட்டமிட்டுள்ளது; பள்ளிகளிலிருந்து இளம் குழந்தைகளுக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பணிப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அவை கைவினைக் கலைஞர்களின் துணயுடன் நடத்தப்படுகிறது. கைவினைக் கலைஞர்கள் தம் கைவினைத் தொழிலை சமகால தயாரிப்புகளை அவர்களின் மரபுகளின் உத்வேகத்தின் அடிப்படையில் தயாரிக்கும் அளவிற்கு வளர்த்துக்கொள்ள உதவுகிறது. , இதன்மூலமாக அவர்கள்நல்ல பொருள் ஈட்டவும், கண்ணியமான வாழ்க்கையை வாழவும் முடிகிறது. "திட்டத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களை முறையாக சேகரிப்பதற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், இதே போன்ற பிற திட்டங்களுடன் தகவல்களைப் பகிர்வதற்கான அடிப்படையை வழங்குவதற்கும் ஒரு ஆவணமாக்கல்-பரவல் திட்டத்தை உருவாக்குதல்" என்ற திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[5]

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

புகைப்பட தொகுப்பு[தொகு]