கோவா அறிவியல் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா அறிவியல் மையம்
Entrance to Goa Science Center.jpg
Map
நிறுவப்பட்டது19 திசம்பர் 2001 (2001-12-19)
அமைவிடம்மீராமர், பன்ஜிம், கோவா
ஆள்கூற்று15°28′39″N 73°48′33″E / 15.477427°N 73.809075°E / 15.477427; 73.809075
வகைஅறிவியல் அருங்காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை12,50,000 (2016)
வலைத்தளம்goasciencecentre.org.in

கோவா அறிவியல் மையம் பன்ஜிமில் மீராமர் என்னுமிடத்தில் நியூ மரைன் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓர் அறிவியல் அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (என்.சி.எஸ்.எம்) மற்றும் கோவாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.

குறிக்கோள்[தொகு]

இந்த மையம் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மனநிலையை வளர்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்புக்கூறுகளை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும், பிரபலமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அறிவியல் மையம்[தொகு]

இந்த அறிவியல் மையமானது கோவா அரசாங்கத்தால் வழங்கப்பட் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது கவர்ச்சிகரமான பூக்களைக் கொண்ட பூங்காவினைக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு பார்வையாளர்கள் இயற்பியலின் அடிப்படைக் கொள்கைகளில் அமைந்த பெரிய காட்சிப்பொருள்கள் மூலமாக கற்றுக் கொள்ளலாம்.[1] பெரும்பாலான பார்வையாளர்கள் ஆர்வமுடன் இங்கு வந்து பார்வையிடுகின்றார்கள். இழுவைக்கயிறு மற்றும் கயிற்றிப் பயன்படுத்தி தங்களைத் தாங்களே தூக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளோர் அவ்வகையைச் சார்ந்தவர்கள் ஆவர். குழந்தைகளுக்கு ஏற்றவாறு பல செயல்பாடுகள் இங்கு வடிவமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதலால் அவர்கள் அறிவியலைப் பற்றி ஆராய்வதையும் அனுபவிப்பதையும், கற்றுக்கொள்வதையும் ஆர்வமாக இங்கு அனுபவிக்கிறார்கள்.[2]

இந்த மையத்தில் உள்ள கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் மூலமாகவும் குழந்தைகள் தம்மை அவை சார்ந்த நிலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள முடியும். அவ்வாறே இங்கு தினமும் குழந்தைகளுக்காக அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து வயதினருக்கும் பொருந்தும் வகையிலான டிஜிட்டல் பிளானட்டோரியம்,[3] 3-டி திரைப்பட நிகழ்ச்சிகள்,[4] அறிவியல் விளக்க விரிவுரைகள், அறிவியல் திரைப்பட நிகழ்ச்சிகள், தரமண்டல் கண்காட்சிகள் மற்றும் சைபர்லேப் கண்காட்சிகள் இங்கு நிகழ்த்தப் பெறுகின்றன.

அறிவியல் மையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கத்தில்140 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. அந்த அரங்கத்தில் அறிவியல் திரைப்பட காட்சிகள் மற்றும் பிற மல்டிமீடியா விளக்கக்காட்சிகள் வெளியிடப்படுகின்றன. சைபர்லேப் என்பது பல்வகை கணினி ஆய்வகமாகச் செயல்படுகின்ற மையமாகும். இது பொதுமக்களிடையே தகவல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இங்கு கொள்கை அடிப்படையிலான இரு காட்சிக்கூடங்கள் உள்ளன. அவை வேடிக்கை தொடர்பான அறிவியல் மற்றும் கடல்சார் அறிவியல் ஆகியனவாகும்.[5]

பார்வையாளர் நேரம்[தொகு]

கோவா அறிவியல் அருங்காட்சியகத்தை காலை 09.30 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் பார்வையிடலாம். நுழைவுச்சீட்டு மாலை 5.30 மணி வரை மட்டுமே வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளி தவிர பிற அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். கோளக் காட்சிகள் காலை 11.00, மாலை 01.00, மாலை 03.00 மற்றும் இரவு 05.00 ஆகிய வேளைகளிலும், 3 டி காட்சிகள் காலை 10.30, மதியம் 12.30, மதியம் 02.30, மாலை 04.30 ஆகிய வேளைகளிலும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளின் நேரம் மாற்றத்திற்கு உட்பட்டதாகும். பார்வையிடுவதற்கு முன்பாக பார்வையாளர்கள் சரியான நேரத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.[6]

கோவா அறிவியல் மையம் மீராமர் கடற்கரைக்கு இடது புறமாக டாக்டர் ஜேக் டெ செகுயிரா (மீராமர்-டோனா பாலா) சாலையில், மீராமர் சர்க்கிள் என்னுமிடத்திலிருந்து 300 மீ தொலைவிலும், பனாஜியிலுள்ள கடம்பா பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து மூலமாகவோ, மகிழ்வுந்து மூலமாகவோ, பைக் மூலமாகவோ இவ்விடத்தை அடையலாம். பனாஜி பேருந்து நிலையத்திலிருந்து மீராமர் சர்க்கிள் வரை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து உள்ளது. அந்த வசதியையும் பார்வையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.[7]

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-05-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. quentin. "Goa Tourism – Exploring Science – Goa Science Centre". goa-tourism.com (ஆங்கிலம்). 2017-12-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-03 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-05-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-03 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Goa Science Centre" (in en). https://www.goaprism.com/goa-science-centre/. 
  6. "GOA SCIENCE CENTRE & PLANETARIUM, National Council of Science Museums, Ministry of Culture, Govt. of India". 2019-11-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-03 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Goa Science Centre - Explore Science". 2019-11-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_அறிவியல்_மையம்&oldid=3718299" இருந்து மீள்விக்கப்பட்டது