உள்ளடக்கத்துக்குச் செல்

மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா, இந்தியாவின் கோவா ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும் முழு அளவு உருவச்சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொறியியலாளரும், மெழுகுக் கைப்பணியாளருமான சிறீஜி பாஸ்கரன் என்பவர் இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளார்.

நாட்டின் முன்னணித் தலைவர்கள், சமயத் தலைவர்கள், கடவுள்களின் சிலைகள் என்பன இங்கே உள்ளன. இவற்றுள், இராமகிருட்டின பரமகம்சர், ரஜனீஸ் ஓசோ, சிறீ ரவிசங்கர், ஆதி சங்கராச்சாரியார், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், டாக்டர் ச. இராதாகிருட்டினன் ஆகியோரது சிலைகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுடன், இயேசு தனது சீடர்களுடன் இறுதி உணவு உண்ணும் காட்சியும் மெழுகில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]