கோளப்பரப்புக் குவிமாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோளப்பரப்புக் குவிமாடம் (geodesic dome) என்பது கோள மேற்பரப்பு ஒன்றின் பெரு வட்டங்களின் மேல் கிடக்கும்படி ஒழுங்கமைக்கப்பட்ட, ஏறத்தாளக் கோளவடிவமான, உதைகால்களின் வலையமைப்பு ஆகும். இவ் வலையமைப்பில் ஒன்றையொன்று வெட்டுகின்ற பல பெரு வட்டங்களினால் உருவாக்கப்படும் முக்கோண அமைப்புகள் முழுக் கோள வடிவ அமைப்பினதும் உறுதிக்குப் பங்களிப்புச் செய்கின்றன. அளவு அதிகரிக்கும்போது மேலும் பலமுள்ளதாக அமையும், மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரே அமைப்பு இது என்று சொல்லப்படுகிறது.

மனிதரால் அறியப்பட்ட எல்லா அமைப்புக்களுடனும் ஒப்பிடும் போது கோள வடிவக் குவிமாடமே ஒரு குறிப்பிட்ட நிறைக்கான அதி உயர்ந்த கன அளவைத் தருகிறது. இவ்வமைப்பை உருவாக்கும் தனித்தனி உதைகால்களிலும் பார்க்க மொத்த அமைப்பாக நோக்கும்போது இக் குவிமாடங்கள் அதிக பலம் கொண்டவையாக விளங்குகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

கோளப்பரப்புக் குவிமாடம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-ta.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி