உள்ளடக்கத்துக்குச் செல்

புலரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபுலரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பக்மின்ஸ்டர்ஃபுலரின் C60 (இடது) மற்றும் கார்பன் நனோ குழாய்கள் (வலது) என்பவை புலரின்களுக்கான சிறந்த உதாரணங்களாகும்..
கார்பன் நனோன்

புலரின் (fullerene) எனப்படுவது மத்தியில் வெற்றிடம் இருக்கும் வகையில் முழுமையாக கார்பனால் ஆன மூலக்கூறுகளாகும். புலரீன்கள் சமீப காலத்தில் கண்டறியப்பட்ட காா்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஆகும். இவை கோள வடிவிலோ குழாய் வடிவிலோ காணப்படலாம்.[1]

கோள வடிவான புலரின்கள் பக்கி பால்கள் எனவும் அழைக்கப்படும் ஏனெனில் அவை காற்பந்தைப் போன்று தோற்றமளிக்கும். குழாய் வடிவானவை கார்பன் நனோ குழாய்கள் எனவும் பக்கி குழாய்கள் எனவும் அழைக்கப்படும். புலரின்கள் காரீயத்தை கட்டமைப்பில் ஒத்தவையாகக் காணப்படும். முதலாவது புலரீன் மூலக்கூறுகள் பக்மின்ஸ்டர்ஃபுலரின் ஆகும்.

வரலாறு

[தொகு]

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ரிச்சா்ட் ஸ்மாலி மற்றும் ராபா்ட் கர்ல் ஆகியோா் 1985 ஆம் ஆண்டு காா்பனின் இந்த புதிய புறவேற்றுமை இயைபைக் கண்டறிந்தனா்.[2] இவா்களோடு சஸக்ஸ் பல்கைலக்கழகத்தில் பணியாற்றிய 'ஹாரி குரோடோ' என்பவரும் இப்பணியில் உடனிருந்தாா்.[3] 60 காா்பன் அணுக்களையும், 32 பக்கங்களையும் (20 அறுகோண அமைப்புகள், 12 ஐங்கோண அமைப்புகள்) கொண்ட இதனை 'பக்கிபால்' என்று பெயாிட்டனா். பிறகு இதுவே 'பக் மினிஸ்டா் புல்லரீன்' என்று அழைக்கப்பட்டது. அமெரிக்க கட்டுமான வல்லுநா் ஆா். பக் மினிஸ்டா் புல்லா் என்பவரால் கோள வடிவ கட்டிட அமைப்பினை இப்புறவேற்றுமை இயைபு பெற்றிருப்பதால் இந்தப் பெயா் வைக்கப்பட்டது."[4] இவ்விதமாக கோள வடிவில் அமைந்த காா்பன் மூலக்கூறுகளின் தொகுதி புல்லரீன்கள் என அழைக்கப்படுகிறது. இத்தகைய மூலக்கூறுகள் அதி தீவிரமான கடத்தும் பண்பைப் பெற்றிருக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fullerene", Encyclopædia Britannica on-line
  2. Iijima, S (1980). "Direct observation of the tetrahedral bonding in graphitized carbon black by high resolution electron microscopy". Journal of Crystal Growth 50 (3): 675–683. doi:10.1016/0022-0248(80)90013-5. Bibcode: 1980JCrGr..50..675I. https://archive.org/details/sim_journal-of-crystal-growth_1980-11_50_3/page/675. 
  3. வேதியியல் மேல்நிலை முதலாம் ஆண்டு தொகுதி -1. தமிழ்நாடு பாடநுால் கழகம், சென்னை-6. 2007. p. 162.
  4. Atkinson, Nancy (27 October 2010). "Buckyballs Could Be Plentiful in the Universe". Universe Today. http://www.universetoday.com/76732/buckyballs-could-be-plentiful-in-the-universe. பார்த்த நாள்: 28 October 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலரின்&oldid=3846442" இலிருந்து மீள்விக்கப்பட்டது