கோல்பின் மின்னாற்பகுப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோல்பின் மின்னாற்பகுப்பு (Kolbe electrolysis)  அல்லது கோல்பின் வினை (Kolbe reaction) எர்மான் கோல்ப் என்பவரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு கரிம வேதி வினை ஆகும்.[1][2] கோல்பின் வினையானது இரண்டு கார்பாக்சிலிக் அமிலங்களின் (அல்லது கார்பாக்சிலேட்டு அயனிகள்) கார்பன்நீக்க இருபடியாக்கல் வினையாகும். ஒட்டுமொத்த பொதுவான வினையானது:

Electrólisis de Kolbe.png

இரண்டு வேறுபட்ட கார்பாக்சிலேட்டு அயனிகளின் கலவையானது பயன்படுத்தப்பட்டால், அனைத்து வகை இணைவுப் பொருத்தங்களுக்கும் சாத்தியமான கரிம விளைபொருட்களின் வடிவங்களும் கிடைக்கப்பெறுகின்றன:

3 R1COO + 3 R2COO → R1−R1 + R1−R2 + R2−R2 + 6 CO2 + 6 e

வினையின் வழிமுறையானது இரண்டு படிநிலை தனி உறுப்புச் செயல்முறையை உள்ளடக்கியுள்ளது: மின் வேதிய கார்பாக்சில் நீக்கம் ஒரு தனி உறுப்பு இடைவினைப் பொருளைத் தருகிறது. பிறகு இத்தகைய இரண்டு இடைவினைப்பொருட்கள் இணைந்து ஒரு சகப்பிணைப்பை உருவாக்குகின்றன.[3] உதாரணமாக, அசிட்டிக் காடியின் மின்னாற்பகுப்பானது எத்தேன் மற்றும் கார்பனீராக்சைடு ஆகியவற்றைத் தருகின்றது.

CH3COOH → CH3COO → CH3COO· → CH3· + CO2
2CH3· → CH3CH3

மற்றொரு உதாரணமானது, 4-மெத்தில்-4-நைட்ரோவாலெரிக் அமிலத்திலிருந்து, 2,7-டைமெத்தில்-2,7-டைநைட்ரோஆக்டேனின் தொகுப்பு முறை தயாரிப்பாகும்.[4]

Kolbe electrolysis, synthesis of 2,7-Dimethyl-2,7-dinitrooctane

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

  • "Kolbe Electrolysis". Organic Chemistry Portal. பார்த்த நாள் 2007-10-22.