கோல்பின் மின்னாற்பகுப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோல்பின் மின்னாற்பகுப்பு (Kolbe electrolysis)  அல்லது கோல்பின் வினை (Kolbe reaction) எர்மான் கோல்ப் என்பவரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு கரிம வேதி வினை ஆகும்.[1][2] கோல்பின் வினையானது இரண்டு கார்பாக்சிலிக் அமிலங்களின் (அல்லது கார்பாக்சிலேட்டு அயனிகள்) கார்பன்நீக்க இருபடியாக்கல் வினையாகும். ஒட்டுமொத்த பொதுவான வினையானது:

இரண்டு வேறுபட்ட கார்பாக்சிலேட்டு அயனிகளின் கலவையானது பயன்படுத்தப்பட்டால், அனைத்து வகை இணைவுப் பொருத்தங்களுக்கும் சாத்தியமான கரிம விளைபொருட்களின் வடிவங்களும் கிடைக்கப்பெறுகின்றன:

3 R1COO + 3 R2COO → R1−R1 + R1−R2 + R2−R2 + 6 CO2 + 6 e

வினையின் வழிமுறையானது இரண்டு படிநிலை தனி உறுப்புச் செயல்முறையை உள்ளடக்கியுள்ளது. மின் வேதிய கார்பாக்சில் நீக்கம் ஒரு தனி உறுப்பு இடைவினைப் பொருளைத் தருகிறது. பிறகு இத்தகைய இரண்டு இடைவினைப்பொருட்கள் இணைந்து ஒரு சகப்பிணைப்பை உருவாக்குகின்றன.[3] உதாரணமாக, அசிட்டிக் காடியின் மின்னாற்பகுப்பானது எத்தேன் மற்றும் கார்பனீராக்சைடு ஆகியவற்றைத் தருகின்றது.

CH3COOH → CH3COO → CH3COO· → CH3· + CO2
2CH3· → CH3CH3

மற்றொரு உதாரணமானது, 4-மெத்தில்-4-நைட்ரோவாலெரிக் அமிலத்திலிருந்து, 2,7-டைமெத்தில்-2,7-டைநைட்ரோஆக்டேனின் தொகுப்பு முறை தயாரிப்பாகும்.[4]

Kolbe electrolysis, synthesis of 2,7-Dimethyl-2,7-dinitrooctane

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Adolph Wilhelm Hermann Kolbe (1848). "Zersetzung der Valeriansäure durch den elektrischen Strom [Decomposition of valeric acid by an electric current]". Annalen der Chemie und Pharmacie 64 (3): 339–341. doi:10.1002/jlac.18480640346. https://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025847739;view=1up;seq=353. 
  2. Adolph Wilhelm Hermann Kolbe (1849). "Untersuchungen über die Elektrolyse organischer Verbindungen [Investigations of the electrolysis of organic compounds]". Annalen der Chemie und Pharmacie 69 (3): 257–372. doi:10.1002/jlac.18490690302. https://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3bh3;view=1up;seq=271. 
  3. Vijh, A. K.; Conway, B. E. (1967). "Electrode Kinetic Aspects of the Kolbe Reaction". Chem Rev 67 (6): 623–664. doi:10.1021/cr60250a003. 
  4. Sharkey, W. H.; Langkammerer, C. M. (1973). "2,7-Dimethyl-2,7-dinitrooctane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0445. ; Collective Volume, vol. 5, p. 445

வெளி இணைப்பு[தொகு]

  • "Kolbe Electrolysis". Organic Chemistry Portal. பார்க்கப்பட்ட நாள் 2007-10-22.