உள்ளடக்கத்துக்குச் செல்

கோல்கொண்டா வியாபாரி பிராமணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்கொண்டா வணிக பிராமணர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம்
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து சமயம் (வைணவம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தேசஸ்த் பிராமணர்நியோகி பிராமணர்

கோல்கொண்டா வியாபார பிராமணர்கள் (Golconda Vyapari Brahmin Or Vyapari Brahmins), தெலுங்கு மொழி பேசும் இப்பிராமணப் பிரிவினர் தற்கால தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதலாக வாழ்கின்றனர். தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் இப்பிராமணர்கள் கர்ணம் எனும் பெயரில் கிராமக் கணக்காளர்களாக பணிபுரிந்தனர்.

கோல்கொண்டா வியாபார பிராமணர்கள், நியோகி பிராமணர்களின் ஒரு பிரிவாகக் கருதப்படுகின்றனர். கோல்கொண்டா வியாபார பிராமணர்கள் வைணவ ஆச்சாரியர்களான மத்துவர் மற்றும் இராமானுஜர் சம்பிரதாயங்களைப் பின்பற்றுகின்றனர்.[1]

வரலாறு

[தொகு]

கோல்கொண்டா வியாபார பிராமணர்களுக்கு தேசஸ்த் பிராமணர்களுடன் நெருங்கி தொடர்பு உண்டு.[2]குதுப் ஷாஹி வம்சத்தினர் ஆண்ட கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் ஐதராபாத் நிசாம் ஆகியவர்களின் ஆட்சிப் பகுதிகளில் இப்பிராமணர்கள் உயர் அதிகாரிகளாக பணியில் இருந்தனர்.[3][4]

கோல்கொண்டா சுல்தான் இப்ராகிம் குதுப் ஷாவின் தலைமைப் படைத்தலைவராக இருந்த தேசஸ்த் பிராமணரான காஷா இராய ராவ் என்பவர் 1579ல் கொண்டவீடு கோட்டையைக் கைப்பற்றினார். மேலும் இவர் தேசஸ்த் பிராமணர் மற்றும் கோல்கொண்டா வியாபார பிராமணர்கள் மற்றும் கம்மவார்களுக்கு தேஷ்முக் (மாவட்ட அதிகாரி) மற்றும் சௌத்திரி பதவிகளும், பட்டங்களும் வழங்கினார். [5][6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Y. Subhashini Subrahmanyam (1975). Social Change in Village India: An Andhra Case Study. Prithvi Raj Publishers. p. 71. The Madhwas or Golconda Vyapari Brahmins follow the teachings of their Guru Madhwachari who preached Dvaita in contrast to Sankaracharya's Advaita which believes that the Jivatma (soul of the individual) and Paramatma (cosmic soul) ...
  2. Indo-British Review Volume 10. Indo-British Historical Society. 1983. p. 44. Deshastha Brahmans, and Golkonda Vyaparis with whom they were linked by marriage, came to power during the time of the last Bahmani Diwan, Mahmud Gawan (d. 1481).
  3. Pandey, Alpana (2015-08-11). Medieval Andhra: A Socio-Historical Perspective (in ஆங்கிலம்). Partridge Publishing. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-5017-8.
  4. Itihas Volume 5. Director of State Archives, Government of Andhra Pradesh. 1977. p. 65. Desastha Brahmins who held the important position of authority in the Deccan, and also Golconda Vyaparis with whom they have intimate connections. Thus at the village level, the old Niyogis who, for several centuries, had built up their power were slowly replaced by the Desastha Brahmins.
  5. Coenraad M. Brand (1973). State and Society: A Reader in Comparative Political Sociology. University of California Press. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520024908.
  6. "Revealing the missing links". Hans India. 24 July 2016. https://www.thehansindia.com/posts/index/Hans/2016-07-24/Revealing-the-missing-links/244188.