உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர் உச்சிமாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாலம்பூர் உச்சிமாநாடு
Kuala Lumpur Summit
நிகழ்நிலைசெயல்பாட்டிலுள்ளது
வகைமாநாடு
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்கோலாலம்பூர் மாநாட்டு மையம்
அமைவிடம்(கள்)கோலாலம்பூர்
நாடுMalaysia
வலைத்தளம்
klsummit.my

கோலாலம்பூர் உச்சிமாநாடு (Kuala Lumpur Summit) மலேசிய நாட்டின் கோலாலம்பூர் நகரில் நடத்தப்படும் ஓர் ஆண்டு நிகழ்வாகும். கே.எல். உச்சிமாநாடு, பெர்தானா உரையாடல் [1] என்ற பெயர்களாலும் இந்நிகழ்வு அழைக்கப்படுகிறது.

ஐந்தாவது உச்சி மாநாடு

[தொகு]

கோலாலம்பூர் உச்சிமாநாட்டின் ஐந்தாவது பதிப்பு "தேசிய இறையாண்மையை அடைவதில் வளர்ச்சியின் பங்கு" என்ற தலைப்புடன் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. கத்தார் நாட்டின் சேக் தமீம் பின் அமாத் அல்தானி, துருக்கிய குடியரசுத் தலைவர் ரெசெப் தயிப் எர்தோகன் மற்றும் ஈரானிய குடியரசுத் தலைவர் அசன் ரூகானி உள்ளிட்ட 56 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய 450 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர். [2][3][4]

தேசிய வளர்ச்சி மற்றும் இறையாண்மை; ஒருமைப்பாடு மற்றும் நல்லாட்சி; கலாச்சாரம் மற்றும் அடையாளம்; நீதி மற்றும் சுதந்திரம்; அமைதி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு; வர்த்தகம் மற்றும் முதலீடு; தொழில்நுட்பம் மற்றும் இணைய நிர்வாகம். உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் உச்சிமாநாட்டு நிகழ்வுகள் கவனம் செலுத்தின.

மேற்கோள்கள்

[தொகு]