கோமரங்கடவலை கல்வெட்டு
கோமரங்கடவல கல்வெட்டு, இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தின் தலைமையிடமான திருக்கோணமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கோமரங்கடவல பிரதேசத்தில் சனவரி, 2021-இல் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் காலத்திய சமசுகிருதம் கலந்த தமிழ் கல்வெட்டாகும். இதன் காலம் கிபி 13-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும்.
கோமரங்கடவல பாறைக் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, இங்கு சிவலிங்கக் கோயில் இருந்ததை குறித்துள்ளது. தற்போது இச்சிவலிங்கம் கோயில் சிதைந்துள்ளது. ஆனால் ஆவுடையுடன் (இலிங்கத்தின் அடிப்பாகம்) கூடிய இலிங்கம் மட்டுமே உள்ளது. மேலும் சில சமசுகிருதச் சொற்களுடன், 22 வரிகளில் தமிழ் மொழியில் கோமரங்கடவல பாறைக் கல்வெட்டு கொண்டுள்ளது.[1]இக்கல்வெட்டில் கிபி 1215-இல் பொலநறுவை இராச்சியத்தை வெற்றி கொண்டு ஆட்சி செய்த கலிங்க மாகன் எனக்குறிப்பிட்டுள்ளது. பொலநறுவை இராச்சியத்தில் நிசங்க மல்லன் ஆட்சியைத் தொடர்ந்து பல குழப்பங்களும், அயல்நாட்டுப் படையெடுப்புக்களும் ஏற்பட்டதைப் பாளி மற்றும் சிங்கள இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் சில எழுத்துக்கள் மறைந்தும்/இல்லாதும் 22 வரிகள் கொண்டுள்ளது. அவைகள்:
- … … க்ஷகே ஸ்ரீவிம்[ங்கோ3]நௌ ம்ருகே3விம்ச0தி ப4.
- …. …..ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ …
- [த்திகள் ?] [ஸ்ரீகுலோ]த்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழ[ம
- ண்டலமான மும்முடி]சோழமண்டலமெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-
- ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-
- [நேமி பூசை கால]ங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ-
- [யிலை]யுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய-
- நாற்கு ச0[க்தி] ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா
- ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்
- ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[து] நாட்டில் ல-
- ச்சிகா[தி]புரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-
- மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய
- மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட
- இந்நா[ச்சியார்க்கு திருபப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-
- க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோத3கம் ப-
- ண்ணிக் குடுத்தேன்இ …. லுள்ளாரழிவு படாமல்
- …ண்ண..ட்ட……ப் பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய்
- நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்
- மாக . . டையார் பி… கெங்கைக் கரையிலாயிரங்
- குரால் பசுவைக் கொன்றா[ர்பாவங்] கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா-
- ஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு …
- மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின்[சொல்படி] … த்தியஞ் செய்வார் செய்வித்தார் .... ......