கோட்டேசுவரர் மகாதேவஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டேசுவர் மகாதேவஸ்தானம் (Koteshwor Mahadevsthan ) என்பது காத்மாண்டு மாவட்டத்தின் பாக்மதி மண்டலத்தில் உள்ள புனிதத் தலங்களில் ஒன்றாகும். இது காத்மாண்டு பெருநகரத்தின் வார்டு எண். 32 (முந்தைய எண் 35) கோட்டேசுவர், காத்மாண்டுவில் அமைந்துள்ளது. இந்த இடம் கோட்டேசுவர் மகாதேவஸ்தான் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆனால் அது தோன்றிய சரியான தேதி பற்றி எழுதப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. இக்கோயிலுக்கு கோட்டிநாத் என்ற பெயரும் உண்டு. ஒரு பிரபலமான புராணத்தின் படி, இங்குள்ள சிவலிங்கம் 64 புனித சிவலிங்கங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.

கோட்டேசுவர் கோயில்

இந்த கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த சரியான தேதி தெரியவில்லை. கோட்டேசுவர் மகாதேவின் வரலாற்றைக் கண்டறிய உதவும் கல்வெட்டு கோயில் வளாகத்தில் உள்ளது, ஆனால் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த இடம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் வழிபடத் தொடங்கியது என்று புராணங்கள் சுட்டிக் காட்டுகின்றன, இருப்பினும் இக்கோயிலின் கட்டடமைப்புகள் மற்றும் தூண்கள், இப்போது இருக்கும் நிலையில், மிகவும் பிற்பகுதியில் கட்டப்பட்டன என்று சொல்லப்படுகிறது. கோட்டேசுவர் கோயிலுக்கு அருகில் சங்கமுல் என்று அழைக்கப்படும் இடம் உள்ளது. சிவபெருமான், சதியின் உடலைத் தன் முதுகில் சுமந்து கொண்டு எல்லையற்ற துயரத்தில் அலைந்து கொண்டிருந்த போது, இந்த இடத்தில் தனது ஒரு காலை ஊன்றினார் என்று நம்பப்படுகிறது. மஹாதேவர் தன் பாதத்தைத் தட்டிய அந்த நிலத்திலிருந்து இடைவிடாத நீர் ஓடியது. திரேதா யுகத்தில், இலங்கையின் சக்தி வாய்ந்த மன்னனான ராவணனின் சகோதரன் பீமசேனன், சங்கமூலத்திலிருந்து தண்ணீரை எடுத்து வந்து, சிவபெருமானுக்கு வழங்குவதற்காக கோட்டேசுவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கோயிலின் சுற்றுப்புறத்தின் உள்ளே, மற்றொரு சிவலிங்கம் உள்ளது, இது கிலேஷ்வர் மகாதேவர் என்று பிரபலமாக அறியப்படுகிறது. [1]

கோவில் வளாகம்[தொகு]

மகாதேவர் கோயிலைத் தவிர, கோயிலின் சுற்றுப்புறத்தில் பல தெய்வங்களும் உள்ளன. பக்தபூரில் சங்கு நாராயணனின் அவதாரமாக கருதப்படும் சின்ன மஸ்தா பகவதி ஒரு முக்கியமான தெய்வம் ஆகும். அவர் பக்தபூரிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, விரிவான வேத தந்திரங்கள் மற்றும் மந்திரங்கள் மூலம் கோட்டேசுவரில் மீள்குடியேற்றப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அடுத்து, காத்மாண்டுவில் உள்ள மிகச் சிலவற்றில் ஒன்றான சப்தரிஷியின் கோயில் உள்ளது. இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் ரிஷி பஞ்சமி நாளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலைச் சுற்றி கூடுவார்கள். இந்த கோயில்கள் மற்றும் தெய்வங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் தோற்றம் மற்றும் முக்கியத்துவத்திற்கு பின்னால் அதன் பூர்வீக கதை உள்ளது எனச் சொல்லப்படுகிறது. [2]

படத்தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Koteshwor Mahadev Temple".
  2. "Koteshwor Mahadev Temple".