கோடிட்ட காகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடிட்ட காகிதத்துடன் கூடிய குறிப்பேடு

கோடிட்ட காகிதம் (Ruled paper) என்பது கையால் எழுதுவதற்கு வசதியாக கோடுகளுடன் அச்சிடப்பட்ட காகிதத்தினைக் குறிப்பதாகும். கோடுகள் பெரும்பாலும் நுண்ணிய அகலத்துடனும் வெளிர் நிற வண்ணங்களில் அச்சிடப்படுகின்றன. இவை சில சமயங்களில் ஏமாற்றுக் காகிதம் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் காணப்படும் ஓரங்கள் தத்தல் நிறுத்தங்களாகச் செயல்படலாம்.

வரலாறு.[தொகு]

ஆரம்பகாலங்களில் காகிதத்தில் கைகளால் கோடுகள் வரையப்பட்டன. பின்னர் வார்ப்புருக்களளும் பயன்படுத்தப்பட்டன. [1] சூன் 15, 1770 இல் பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர் ஜான் டெட்லோ "இசை மற்றும் பிற நோக்கங்களுக்காக காகிதத்தில் கோடிடும் இயந்திரத்திற்கான" காப்புரிமையினைப் பெற்றார்.

பிராந்திய தரநிலைகள்[தொகு]

ஆளும் தளவமைப்புகளுக்கு, குறிப்பாக கல்வி அல்லது அரசாங்க எழுத்தர் நோக்கங்களுக்காக பிராந்திய தரநிலைகள் உள்ளன.

சீனா[தொகு]

தொடக்கக் கல்வி மாணவர்கள் தியான்சிகே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர் அதில் ஒவ்வொரு எழுத்துக்களையும் தனியாக எழுதுவதற்கான பெட்டிகள் உள்ளது. சில நேரங்களில் ஒவ்வொரு பெட்டியும் எழுத்தின் தொடர்புடைய விகிதாச்சாரத்திற்கும் சீன வேர் எழுத்துக்களின் கூறுகளுக்கும் உதவுவதற்காக செங்குத்தாக, கிடைமட்டமாக, குறுக்காகவோ பிரிக்கப்படுகின்றன.செருமனி

DIN 16552:1977-[2] (கையால் எழுதுவதற்கான கோடுகள்) பள்ளி மாணவர்களால் பயன்படுத்தப்பட வேண்டிய காகித வகைகளைக் குறிப்பிடுகிறது.

இந்தியா[தொகு]

தரப்படுத்தப்படாத பல வகைகளில் கோடிட்ட காகித குறிப்பேடுகள் இந்தியாவில் உள்ளன.

  • இரட்டை கோடிட்ட காகிதம் - பொதுவாக 15 மிமீ இடைவெளியில் காணப்படுகின்றன. (தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் தமிழ் எழுத்துப் பயிற்சிக்காக வழங்கப்படுகிறது)
  • நான்கு கோடிட்ட காகிதம் - கையெழுத்துப் பயிற்சிக்கானது
  • ஒற்றைக் கோடிட்ட காகிதம் பொதுவாக 8 மிமீ இடைவெளியில் காணப்படும். (தேர்வுத் தாள்)
  • சதுர கணித காகிதம் 5 மிமீ சதுர வடிவ கட்டம் கொண்டது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wight, C. "M - Glossary for the British Library Catalogue of Illuminated Manuscripts". www.bl.uk. Archived from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
  2. Kuhn, M., International standard paper sizes பரணிடப்பட்டது 15 சனவரி 2008 at the வந்தவழி இயந்திரம், accessed 1 March 2012

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடிட்ட_காகிதம்&oldid=3908781" இலிருந்து மீள்விக்கப்பட்டது