பயிற்சிப் புத்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பயிற்சிப் புத்தகம் (exercise book) என்பது பள்ளிகளில் பள்ளி வேலைகள் மற்றும் குறிப்புகளை நகலெடுக்கப் பயன்படுத்தப்படும் குறிப்பேடு ஆகும். ஒரு மாணவர் பொதுவாக ஒவ்வொரு பாடத்திற்கும் வெவேறு பயிற்சிப் புத்தகத்தை வைத்திருப்பார்கள்.

பாடங்களைப் பொறுத்து பயிற்சிப் புத்தகம் மாறுபடலாம்.பெரும்பாலான பாடங்களுக்கு, பயிற்சி புத்தகத்தில் ஓரம் கொண்ட வரிசைக் காகிதம் இருக்கும், ஆனால் கணிதம் போன்ற மற்ற பாடங்களுக்கு, அட்டவணைகள் அல்லது பிற வரைபடங்கள், கோட்டுரு வரைபடங்களை வரைவதற்கு உதவுவதற்காக, பயிற்சிப் புத்தகத்தில் சதுர காகிதம் இருக்கும், .

மாணவர்களின் கற்றல் முயற்சிகளின் முதன்மைப் பதிவேடாக பயிற்சிப் புத்தகங்கள் செயல்படலாம். மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் மதிப்பாய்வு, மதிப்பெண்கள் வழங்குவதற்காக அல்லது தரவரிசைப்படுத்துவதற்காக பயிற்சிப் புத்தகங்கள் பெரும்பாலும் சேகரிக்கப்படுகின்றன. தனித்த பணித்தாள்கள் இவ்வகையான புத்தகத்தில் ஒட்டப்பட்டு மற்ற வேலைகளுடன் பிணைக்கப்படும்.

பயிற்சிப் புத்தகம் வரலாற்று ரீதியாக பதிப்புப் புத்தகம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது இந்தியாவில் கட்டா என்றும், கனடாவில் இசுகிரிப்ளர் (எழுதுபவர்) என்றும், இசுக்கொட்லாந்தில் ஜோட்டர் என்றும்[1], அயர்லாந்தில் நகல் புத்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.[ மேற்கோள் தேவை ]

சான்றுகள்[தொகு]

  1. "Scots word of the Week: Jotter". The Herald. Although shared with English, the origin of jot and jotter appears to be Scots. The Dictionary of the Scots Language (DSL) [says] "a note, memorandum, now especially applied to a pupil's rough exercise book".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிற்சிப்_புத்தகம்&oldid=3907327" இலிருந்து மீள்விக்கப்பட்டது