ஓரம் (அச்சுக்கலை)
Appearance
அச்சுக்கலையில் ஓரம் (Margin) என்பது ஒரு பக்கத்தின் உள்ளடக்கத்தைச் சுற்றியுள்ள இடைவெளி ஆகும்.[1] உரையின் ஒரு வரி எங்கே தொடங்கும் என்பதையும் எங்கே முடிவடையும் என்பதையும் வரையறுப்பதற்கு ஓரங்கள் உதவி செய்கின்றன. சீர்படுத்திய உரையானது இடது, வலது ஓரங்கள் இரண்டிலும் தொட்டவாறு இருக்கும்.[2]
மைக்ரோசாப்ட் வேர்டுவில் 2007ஆம் ஆண்டுப் பதிப்பிலிருந்து ஓரங்கள் இயல்பாகவே அனைத்துப் பக்கங்களிலும் ஓரங்குல இடைவெளியில் அமைந்துள்ளன.[3] ஆனால், மைக்ரோசாப்ட் வேர்டு 2003 வரை மேல், கீழ் ஓரங்கள் ஓரங்குலமாகவும் இடது, வலது ஓரங்கள் 1.25 அங்குலங்களாகவும் இயல்பாக இருந்தன. ஓப்பன் ஆபிசு ரைட்டரில் அனைத்துப் பக்கங்களிலும் 0.79 அங்குல (இரண்டு சென்ரிமீற்றர்) அளவிலான ஓரங்கள் இருக்கும்.