கோகேலி மாகாணம்

ஆள்கூறுகள்: 40°51′07″N 29°52′41″E / 40.852°N 29.878°E / 40.852; 29.878
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகேலி
Kocaeli
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் கோகேலி மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் கோகேலி மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 40°51′07″N 29°52′41″E / 40.852°N 29.878°E / 40.852; 29.878
நாடுதுருக்கி
பகுதிகிழக்கு மர்மரா
துணைப்பகுதிகோகேலி
தலைநகரம்இஸ்மித்
அரசு
 • தேர்தல் மாவட்டம்கோகேலி
 • ஆளுநர்செடார் யவுஸ்
பரப்பளவு
 • மொத்தம்3,626 km2 (1,400 sq mi)
மக்கள்தொகை (2019)[1]
 • மொத்தம்1,953,035
 • அடர்த்தி540.7/km2 (1,400/sq mi)
தொலைபேசி குறியீடு00262
வாகனப் பதிவு41

கோகேலி மாகாணம் (Kocaeli Province, துருக்கியம்: Kocaeli ili , pronounced [kodʒaeli] ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். சில நேரங்களில் இது கொசேலி என அழைக்கப்படுகிறது. மாகாணத்தின் மிகப்பெரிய நகரங்களாக மிட்சிமிட் மற்றும் கெப்சி ஆகியவை ஆகும். மாகாணத்தின் போக்குவரத்துக் குறியீடு 41 ஆகும். மர்மரா கடலின் கிழக்கு முனையில் இஸ்மிட் வளைகுடாவைச் சுற்றி இந்த மாகாணம் அமைந்துள்ளது. கோகேலி மாகாணத்தின் மேற்கு எல்லைகளாக இசுதான்புல் மாகாணம் மற்றும் மர்மாரா கடலும், வடக்கே கருங்கடல், கிழக்கே சாகர்யா மாகாணம், தெற்கே பர்சா மாகாணம், தென்மேற்கில் யலோவா மாகாணம் ஆகியவை உள்ளன. இஸ்தான்புல் பெருநகரப் பகுதியானது கோகேலி-இஸ்தான்புல் மாகாண எல்லை வரை நீண்டுள்ளது. ஆஸ்மிட் விரிகுடாவின் அளவு மற்றும் இயற்கை அமைப்பு போன்றவை கோல்காக் கடற்படைத் தளம் உட்பட விரிவான துறைமுக வசதிகளுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த மாகாணம் துருக்கியின் தொழில்துறை தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. கோகேலியில் செங்கிஸ் டோபல் கடற்படை வானூர்தி நிலையம் என்ற வானூர்தி நிலையம் உள்ளது, இது இராணுவ மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கோகேலியில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை கோகேலி பல்கலைக்கழகம் மற்றும் கெப்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பவை ஆகும்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

கோகேலி பெருநகர நகராட்சி [2] மற்றும் மத்திய பரவல் அமைப்பு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவு. [3] தகவல் (xxxx-12-31) .

மாவட்டம் 2009 2010 2011 2012 2013 2014 2015
கோகேலி 1,522,408 1,560,138 1,601,720 1,634,691 1,676,202 1,722,795 1,780,055
இஸ்மித் 313,964 315,734 322,588 327,435 332,754 338,710 347,074
கெப்ஸ் 297,029 305,557 314,122 319,307 329,195 338,412 350,115
டெரின்ஸ் 123,136 124,452 126,675 128,810 130,657 133,739 136,742
டாரகா 140,302 146,896 152,542 157,304 164,385 173,139 182,710
கோர்பெஸ் 130,730 132,779 135,692 139,220 142,884 146,210 151,149
கோல்காக் 136,035 137,637 141,926 143,867 145,805 149,238 152,607
கைரோவா 82,494 88,523 93,640 98,367 103,536 109,698 117,230
கராமர்செல் 50,886 51,987 52,501 52,621 53,033 54,225 55,169
திலோவாச 44,258 44,958 45,060 44,981 45,610 45,714 46,099
காந்தரா 46,984 49,769 49,554 50,042 50,046 49,203 48,937
பாசிஸ்கெல் 66,183 68,037 70,835 73,327 76,605 79,625 84,235
கார்டெப் 90,407 93,809 96,585 99,410 101,692 104,882 107,988

மாவட்டங்கள்[தொகு]

கோகேலி மாவட்டங்கள்

கோகேலி மாகாணம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, தலைநகரான இஸ்மித் ( தடித்து காட்டப்பட்டுள்ளது):

 • கோகலே: 1,722,795
  • டெரின்ஸ் : 133.739
  • கெப்ஸ் : 338.412
  • கோல்காக் : 149.238
  • இஸ்மித் : 338.710
  • காந்தரா : 49.203
  • கராமர்செல் : 54.225
  • கோர்பெஸ் : 146,210
  • கார்டெப் : 104,882
  • பாசிஸ்கெல் : 79,625
  • கயிரோவா : 109,698
  • திலோவாச : 45,714
  • தாரிகா : 173.139

குறிப்புகள்[தொகு]

 1. "Turkey: Major cities and provinces". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.
 2. "Population of Districts by Year and Dependency Ratio". Kocaeli Metropolitan Municipality. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-29.
 3. "Central Dissemination System". Turkish Statistical Institute. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகேலி_மாகாணம்&oldid=3791503" இலிருந்து மீள்விக்கப்பட்டது