உள்ளடக்கத்துக்குச் செல்

கொலராடோ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலராடோ ஆறு
Map
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கலிபோர்னியா குடா
நீளம்2,330 கி.மீ (1,450 மைல்)

கொலராடோ ஆறு (Colorado River) சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோவின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330 கி.மீ. ராக்கி மலைத்தொடரின் வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. கிராண்ட் ஏரியில் உற்பத்தியாகி கலிபோர்னியா குடாவில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் மெக்சிகோ பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.

629,100 சதுர கி.மீ. நிலப்பரப்பு கொலராடோ ஆற்றினால் வடிகால் வசதி பெறுகிறது. இதன் மொத்த நீரோட்டம் வறட்சி காலங்களில் ௧௧௩ மீ\வினாடி ஆகும். வெள்ள காலங்களில் 28,000 மீ3/வினாடி ஆகும். இதன் கீழ்பகுதியில் கட்டப்பட்ட பெரிய அணைகளால் நீரோட்டம் 2,000 மீ3/வினாடி (71,000 கனஅடி/வினாடி) மேல் இருப்பது அரிதாகும். 1903-34. கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 620 கனஅடி/வினாடி ஆக இருந்தது. 1951-80, கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 110 m3/s (3,900 கனஅடி/வினாடி) அளவுக்கும் குறைவானதாகும்.

அரிசோனா மாநிலத்தில் கொலராடோவின் குதிரைலாட வளைவு தோற்றம்
கிராண்ட் கேன்யன் வழியே செல்லும் கொலராடோ

ஊவர் அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நெவாடா மாநிலத்தையும் அரிசோனா மாநிலத்தையும் இந்த ஆறானது பிரிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
    "https://ta.wikipedia.org/w/index.php?title=கொலராடோ_ஆறு&oldid=4622998" இலிருந்து மீள்விக்கப்பட்டது