கொரோர்
கொரோர் | |
---|---|
நாடு | பலாவு |
தலைநகரம் | கொரோர் |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 14,000 |
கொரோர் (Koror) என்பது பலாவுக் குடியரசின் பிரதான வர்த்தக மத்திய நிலையமும், மாநிலமும் ஆகும். இது பல்வேறு தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்தீவுகளில் முக்கியத்துவம் கொரோர் தீவு ஆகும். அத்தீவு ஒரியோர் தீவு எனவும் அறியப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இம்மாநிலத்தில் 14,000 மக்கள் வசிக்கின்றனர். பலாவு நாட்டில் வசிக்கும் மக்களில் 70 வீதமானோர் இம்மாநிலத்தைச் சேர்ந்தோர் ஆவர். இம்மாநிலம் 2006 ஆம் ஆண்டு வரை பலாவு நாட்டின் தலைநகரமாக அமைந்திருந்தது. எனினும் 7 ஒக்டோபர் 2006 அன்று நாட்டின் தலைநகரம் கொரோரில் இருந்து கெருல்மூடுவிற்கு இடம் மாற்றப்பட்டது. 7°20′32″N 134°28′38″E / 7.34222°N 134.47719°E எனும் ஆள்கூற்றில் இது அமைந்துள்ளது.[1]
சுற்றுலாத்துறை
[தொகு]பலாவு நாட்டின் பெரும்பாலான பொருளாதாரம் சுற்றுலாத்துறையிலேயே தங்கியுள்ளது. கொரோர் மாநிலத்தில் அமைந்துள்ள ராக் தீவுகள் எனும் பிரபலாமான தீவுப்பகுதி நாட்டின் சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இசுகூபா மூழ்கலுக்கான கடைகள் மற்றும் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் அனைத்தும் கொரோர் மாநிலம் முழுவதும் காணப்படுகின்றது. அத்துடன் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், மதுபான சாலைகள் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன. இவை தவிர பழக்கப்பட்ட டொல்பின்களுடன் இடைத்தொடர்புகளை மேற்கொள்ளும் வசதி ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.[2]
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Koror (1981−2010 normals, extremes 1951−present)[a] | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.9 (93) |
33.9 (93) |
34.4 (94) |
34.4 (94) |
34.4 (94) |
35 (95) |
33.9 (93) |
34.4 (94) |
33.3 (92) |
33.9 (93) |
33.9 (93) |
34.4 (94) |
35 (95) |
உயர் சராசரி °C (°F) | 30.28 (86.5) |
30.22 (86.4) |
30.61 (87.1) |
31 (87.8) |
30.94 (87.7) |
30.44 (86.8) |
30.06 (86.1) |
30 (86.0) |
30.28 (86.5) |
30.56 (87.0) |
31 (87.8) |
30.67 (87.2) |
30.5 (86.9) |
தாழ் சராசரி °C (°F) | 24.61 (76.3) |
24.5 (76.1) |
24.61 (76.3) |
24.94 (76.9) |
25 (77.0) |
24.67 (76.4) |
24.67 (76.4) |
25 (77.0) |
25 (77.0) |
25.06 (77.1) |
25 (77.0) |
24.83 (76.7) |
24.83 (76.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 20.6 (69) |
21.7 (71) |
20.6 (69) |
20.6 (69) |
21.7 (71) |
21.7 (71) |
21.1 (70) |
21.1 (70) |
21.1 (70) |
21.7 (71) |
21.1 (70) |
21.7 (71) |
20.6 (69) |
பொழிவு mm (inches) | 281.7 (11.09) |
242.3 (9.54) |
210.1 (8.27) |
208 (8.19) |
318 (12.52) |
457.5 (18.01) |
460.2 (18.12) |
353.6 (13.92) |
307.1 (12.09) |
306.3 (12.06) |
302.3 (11.90) |
303 (11.93) |
3,750.1 (147.64) |
% ஈரப்பதம் | 84.3 | 83.7 | 83.8 | 83.3 | 85.4 | 86.2 | 85.3 | 84.9 | 83.7 | 84.8 | 85.1 | 85.0 | 84.6 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.25 mm) | 23.2 | 19.6 | 20.0 | 18.7 | 23.3 | 25.1 | 24.1 | 20.4 | 19.9 | 21.6 | 22.9 | 24.6 | 263.4 |
சூரியஒளி நேரம் | 199.8 | 194.5 | 244.0 | 234.2 | 212.3 | 168.9 | 186.9 | 176.8 | 197.2 | 179.5 | 183.3 | 183.1 | 2,360.5 |
ஆதாரம்: NOAA (relative humidity and sun 1961−1990)[3][4][5] |
குறிப்புகள்
[தொகு]- ↑ To access the data. Click on NOWdata, then choose "View Map" under location then choose "Show more stations", select Koror WSO and choose Daily/monthly normal and monthly summarized data for normals and extremes
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-23. பார்க்கப்பட்ட நாள் 2016-01-13.
- ↑ "Dolphins Pacific". 2008-08-22. பார்க்கப்பட்ட நாள் 2008-11-26.
- ↑ "NowData - NOAA Online Weather Data". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "PW Koror WSO". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "WMO climate normals for Koror/W Caroline Islands, PI 1961−1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.