கொரநாட்டுக் கருப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொரநாட்டுு கருப்பூர் காவேரிி அன்னை கரையோரம் அமைந்துள்ள சிறு கிராமம். ஊரின் ஒரு பக்கம் பெட்டி காளியம்மன் கோவிலும் மறுபக்கம் காவிரி அணையும். மறு இரண்டு பக்கங்கள் . ஒருபக்கத்தில் கும்பகோணமும் மறுபக்கத்தில் காவிரியிலிருந்து வீரசோழன் என்ற நதி பிரியம் மனஞ்சேரி இவை களுக்கு நடுவில் அமைந் திருப்பது தான் கொரநாட்டு கருப்பூர்

கொரநாட்டுக் கருப்பூர்[தொகு]

கொரநாட்டுக் கருப்பூர் கும்பகோணம்[1] வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சியாகும். இவ்வூர் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணம் வட்டத்திலேயே மிகப்பெரிய ஊராட்சியாகும். இவ்வூரில் தலவிருட்சமான பாதிரி மரங்கள் அதிகமாக இருந்ததால் திருப்பாடலவனம் என்று முன்னர் அழைக்கப்பட்டது

மக்கள் தொகை[தொகு]

இவ்வூராட்சி கொரநாட்டுக் கருப்பூர் -1 மற்றும் கொரநாட்டுக் கருப்பூர் -2 என்று நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொரநாட்டுக் கருப்பூர் -1 கிராமத்தின் மக்கள் தொகை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2349 ஆகும்[2]. இவற்றில் ஆண்கள் 1169 பேரும் பெண்கள் 1180 பேரும் அடங்குவர்.

கொரநாட்டுக் கருப்பூர் -2 கிராமத்தின் மக்கள் தொகை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6347 ஆகும்[3]. இவற்றில் 3042 பேர் ஆண்கள். 3305 பேர் பெண்கள் ஆவார்கள்.

ஆண்-பெண் விகிதத்தை பொறுத்த வரையில் கொரநாட்டுக் கருப்பூர்-1 கிராமம் 1000 ஆண்களுக்கு 1009 பெண்களை கொண்டுள்ளது. இது தமிழக சராசரியான 996-ஐ விட அதிகம். இதே போல் கொரநாட்டுக் கருப்பூர்-2 கிராமமும் 1000 ஆண்களுக்கு 1086 பெண்களை கொண்டுள்ளது.

கல்வியறிவு[தொகு]

கொரநாட்டுக் கருப்பூர் -1 கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 75.77 சதவிகிதம் ஆகும். இது தமிழக சராசரியான 80.09 சதவிகிதத்தை விட குறைவு. கொரநாட்டுக் கருப்பூர்-2 கிராமத்தின் கல்வியறிவு சதவிகிதம் 84.06 ஆகும். இது தமிழக சராசரியான 80.09 சதவிகிதத்தை விட அதிகம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றும், அரசு உதவிப் பெறும் நடுநிலைப்பள்ளிகளும் இவ்வூரில் அமைந்துள்ளன.

சமயம்[தொகு]

கொரநாட்டுக் கருப்பூர் கிராமத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் அமைந்துள்ளன. சுந்தரேசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயமாகும்[4]. இந்த சிவாலயத்தினை திருப்பாடலவனம் சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைப்பர். புராணக் காலத்தில் கொரநாட்டுக் கருப்பூர் என்ற இவ்வூர் திருப்பாடலவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இக்கோயில் வளாகத்தில் மூலவர் கருவறைக்கு இடப்புறம் உள்ள பகுதியில் பெட்டி காளியம்மன் கோயில் என்றழைக்கப்படும் சுந்தரமகாகாளியின் சன்னதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வூரில் திறந்த நிலையில் உள்ள, லிங்கத்திருமேனியைக் கொண்ட அகத்தீசுவரர் கோயில் என்ற மற்றொரு சிவன் கோயில் உள்ளது. அக்கோயில் தேவார வைப்புத்தலமாகும்.

மேலும் இவ்வூரில் வரதராஜபெருமாள் கோயிலும், சுந்தரவள்ளி மாரியம்மன் கோயிலும் அமைந்துள்ளன. இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் ஒன்றும், கிறிஸ்தவர்களின் கொரநாட்டுக்கருப்பூர் பங்கு ஆலயம் ஒன்றும் இவ்வூரில் அமைந்துள்ளது.

ஆறுகள்[தொகு]

இவ்வூரில் காவிரி ஆறு பாய்கிறது. காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தலைப்பில் இருந்து வீரசோழன், புது மண்ணியாறு ஆகியவை பிரிகின்றன. கொரநாட்டுக்கருப்பூர் வாய்க்கால், கொண்டாங்குடி வாய்க்கால் ஆகியவை மூலம் வாய்க்கால் பாசனமும் நடைபெறுகின்றன.

போக்குவரத்து[தொகு]

இவ்வூரின் வழியாக விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை எண் 45-சி செல்கிறது. மேலும் கல்லணை-பூம்புகார் மாநில நெடுஞ்சாலையும் செல்கிறது. கும்பகோணம் புறவழிச்சாலை இவ்வூரின் ஊடாக செல்கிறது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கும்பகோணம் ஆகும். கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இவ்வூரின் வழியாக இயக்கப்படுகின்றன.

  1. "கும்பகோணம் வட்டம்", தமிழ் விக்கிப்பீடியா, 2018-09-13, பார்க்கப்பட்ட நாள் 2019-03-26
  2. "கும்பகோணம் வட்டம்", தமிழ் விக்கிப்பீடியா, 2018-09-13, பார்க்கப்பட்ட நாள் 2019-03-26
  3. "கும்பகோணம் வட்டம்", தமிழ் விக்கிப்பீடியா, 2018-09-13, பார்க்கப்பட்ட நாள் 2019-03-26
  4. "கொரநாட்டுக் கருப்பூர் சுந்தரேசுவரர் கோயில்", தமிழ் விக்கிப்பீடியா, 2018-11-19, பார்க்கப்பட்ட நாள் 2019-03-26
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரநாட்டுக்_கருப்பூர்&oldid=2983406" இலிருந்து மீள்விக்கப்பட்டது