உள்ளடக்கத்துக்குச் செல்

கொன்யா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொன்யா மாகாணம்
Konya ili
Location of Konya Province in Turkey
Location of Konya Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்மேற்கு அனடோலியா
துணை பிராந்தியம்கொன்யா
அரசு
 • மாவட்டம்கொன்யா
 • ஆளுநர்வஹெடெடின் ஓஸ்கான்
பரப்பளவு
 • மொத்தம்38,257 km2 (14,771 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்22,05,609
 • அடர்த்தி58/km2 (150/sq mi)
Area code0332
வாகனப் பதிவு42

கொன்யா மாகாணம் ( துருக்கியம்: Konya ili) துருக்கி நாட்டின் தென்மேற்கு-மத்திய அனடோலியாவில் உள்ள ஓர் மாகாணமாகும் . இந்த மாகாணத்தின் தலைநகரம் கொன்யா நகரமாகும். பரப்பளவில் மற்ற மாகாணத்தை விட இது துருக்கியின் மிகப்பெரிய மாகாணமாகும். இதன் போக்குவரத்துக் குறியீடு 42 ஆகும்.

கொன்யாவில் உள்ள கோசலரென் சூரிய மின் உற்பத்தி நிலையத்தால் 22.5 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதன் பரப்பளவு 430,000 சதுர மீட்டர் ஆகும்[2]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் தகவலின்படி கொன்யா மாகாணத்தின் மக்கள்தொகையில் 2 மில்லியன் ஆகும். இதில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொன்யா பெருநகர நகராட்சியில் தான் வசிக்கின்றனர். (கொன்யா மாகாணத்தில் 76.2% மக்கள் நகரத்தில் வாழ்கின்றனர், மீதமுள்ளவர்கள் கிராமங்கள், துணை மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களில் வாழ்கின்றனர்.) கொன்யா மாகாணத்தில் 31 மாவட்டங்கள் உள்ளன, அவற்றில் மூன்று மத்திய மாவட்டங்கள்: கரடே, மேரம் மற்றும் செல்சுக்லு.

மொழி கணக்கெடுப்பு[தொகு]

அதிகாரப்பூர்வ முதல் மொழி முடிவுகள் (1927-1965 [3] )

மொழி 1927 1935 1945 1950 1955 1960 1965
துருக்கியம் 94.8% 95.3% 96.1% 95.7% 96.6% 98.7% 97.3%
குர்திஷ் 4.2% 4% 3.8% 2.6% 2.9% 1.1% 2.5%
சர்க்காசியன் 0.4% 0.3% 0.1% 0.2% 0.2% 0.1% 0.1%
டாடர் 0.2% 0.3% இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
அல்பேனிய 0.1% 0% 0% 0% 0% 0% 0%
மற்றவை 0.2% 0.1% 0% 1.5% 0.3% 0% 0.1%

பிரிவுகள்[தொகு]

கொன்யா மாகாணம் 31 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்று மாவட்டம் கொன்யா நகரின் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

கொன்யா மாகாண மாவட்டங்கள்

குகைகள்[தொகு]

கொன்யா மாகாணத்தில் உள்ள குகைகள்:

  • பாலதினி குகை, பெய்செஹிர்
  • ப்யு துடன் குகை, தேரேபுகக்
  • கோர்கினி குகை, பெய்செஹிர்
  • டெனாஸ்டெப் குகைகள், செடிசெஹிர்

மேலும் காண்க[தொகு]

  • கொன்யா மாகாணம், உதுமானிய பேரரசு

புகைப்படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. Company opens Turkey’s ‘largest solar power plant’ in Central Anatolia
  3. Türkiye Nüfus Sayimlarinda Azinliklar. பார்க்கப்பட்ட நாள் 16 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்யா_மாகாணம்&oldid=3759298" இலிருந்து மீள்விக்கப்பட்டது