கொத்தப்பள்ளி சாமுவேல் ஜவகர்
கொத்தப்பள்ளி சாமுவேல் ஜவகர் | |
---|---|
ஆந்திரப் பிரதேச அரசில் கலால் துறை அமைச்சர் | |
பதவியில் 2 ஏப்ரல் 2017 – 29 மே 2019 | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | டி. வி. ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி |
பின்னவர் | தானேதி வனிதா, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
தொகுதி | கொவ்வூர், கிழக்கு கோதாவரி மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 சனவரி 1965 கனுகப்பாடு, திருவூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (2014 – தற்போது வரை) |
துணைவர் | உஷாராணி |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் | அமிர்தம், தனம்மாள் |
வேலை | ஆசிரியர், அரசியல்வாதி |
கொத்தப்பள்ளி சாமுவேல் ஜவகர் (Kothapalli Samuel Jawahar) (பிறப்பு: ஜனவரி 26, 1965), கே. எஸ். ஜவகர் என்றும் பிரபலமாக அறியப்படுபடும் இவர், [1] ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். [2] இவர் ஆந்திரப் பிரதேச அரசில் 2017 முதல் 2019 வரை மாநில கலால் துறை அமைச்சராகப் பணியாற்றினார். [3] 2014 முதல் 2019 வரை கொவ்வூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் ( [4] ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கொவ்வூரில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், ஆந்திரப் பிரதேச ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவராகப் பதவி வகித்தார். [5] 2014 தேர்தலுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினரானார். [6]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2014-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி மூலம் அரசியலில் நுழைந்த ஜவகர் ஆசிரியர் பதவியை விடு விலகி 2014 தேர்தலில் கொவ்வூர் தொகுதியில் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். [7] [8] 12,745 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தானேதி வனிதாவை தோற்கடித்தார். [9]
இவர் என்ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் விவசாயக் குழுவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2, 2017 அன்று, ஆந்திரப் பிரதேசத்தில் அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக கலால் துறை அமைச்சராக [10] [11] இவர் பொறுப்பேற்றார். [12] 2019 தேர்தலில், இவர் திருவூர் சட்டமன்ற தொகுதிக்கு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். [13] ஆனால் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கொக்கிலிகடா ரக்சனா நிதியிடம் 10,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். [14] [15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "కొత్త మంత్రుల పుట్టుపూర్వోత్తరాలు | Andhrabhoomi - Telugu News Paper Portal | Daily Newspaper in Telugu | Telugu News Headlines | Andhrabhoomi". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "Sonrise in AP: Lokesh new IT, panchayat raj minister". https://timesofindia.indiatimes.com/city/vijayawada/sonrise-in-ap-lokesh-new-it-panchayat-raj-minister/articleshow/58002406.cms. பார்த்த நாள்: 2023-10-02.
- ↑ "Top stories of the day - July 5, 2017". https://www.thehindu.com/news/national/top-stories-of-the-day-july-5-2017/article19216193.ece. பார்த்த நாள்: 2023-10-02.
- ↑ "Public Representatives | West Godavari District, Government of Andhra Pradesh | India". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "ఏపీ మంత్రివర్గంలో కొత్త వారి వ్యక్తిగత వివరాలు" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "Excise Minister Jawahar to contest against MLA Rakshana" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "Kothapalli Samuel Jawahar(TDP):Constituency- KOVVUR(WEST GODAVARI) - Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "ఆంధ్రప్రదేశ్ విజేతలు" (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "IndiaVotes AC: Kovvur 2014". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "11 new faces, including Lokesh, in Cabinet; 4 from YSRCP make it" (in en-IN). https://www.thehindu.com/news/national/andhra-pradesh/11-new-faces-including-lokesh-in-cabinet-4-from-ysrcp-make-it/article17761801.ece.
- ↑ "Kothapalli Samuel Jawahar vows arrack-free AP" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "ఇవీ ఆంధ్రా కొత్త మంత్రుల శాఖలు". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "Kothapalli Samuel Jawahar(TDP):Constituency- TIRUVURU(KRISHNA) - Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "IndiaVotes AC: Tiruvuru 2019". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "YSRCP set to wrest many seats from Telugu Desam in Krishna district" (in en-IN). https://www.thehindu.com/news/cities/Vijayawada/ysrcp-set-to-wrest-many-seats-from-telugu-desam-in-krishna-district/article27231075.ece.