உள்ளடக்கத்துக்குச் செல்

தானேதி வனிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானேதி வனிதா
Taneti Vanita
உள்துறை, சிறை, தீயணைப்பு சேவைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஏப்ரல் 2022
முன்னையவர்மேகதோதி சுசரிதா
பெண்கள், குழந்தைகள், மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நல அமைச்சர்
பதவியில்
8 சூன் 2019 – 7 ஏப்ரல் 2022
முன்னையவர்சுனிதா
பின்னவர்கே. வி. உஷாசிறீ சரண்
உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்கே. எசு. ஜவகர்
தொகுதிகொவ்வூர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2009–2014
முன்னையவர்மாதாலா சுனிதா
பின்னவர்முப்பிதி வெங்கடேசராவ்
தொகுதிகோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூன் 1971 (1971-06-24) (அகவை 53)
கோபாலபுரம், மேற்கு கோதாவரி மாவட்டம்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி

தானேதி வனிதா (Taneti Vanitha) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2022 ஆம் ஆண்டு முதல் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் உள்துறை, சிறை, தீயணைப்பு சேவைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக உள்ளார். இவர் மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ஆந்திரப் பிரதேசம் பிரிப்பதில் தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டின் காரணமாக இவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியில் சேர்ந்து கொவ்வூரில் போட்டியிட்டார்.

தொழில்

[தொகு]

வனிதா தெலுங்கு தேசம் கட்சி சார்பாக 2009ஆம் ஆண்டு கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் நவம்பர் 2012-ல் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சிக்கு மாறினார்.[1][2] 2019ஆம் ஆண்டு கொவ்வூரிலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 25000 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2022 இல் அமைச்சரவை மறுசீரமைப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக வனிதா நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Amarnath K. Menon (November 1, 2012). "More MLAs from the Congress and the TDP are shifting to the fledgling party". India Today.
  2. "Telugu Desam Party suspends yet another MLA". 31 October 2012 – via www.thehindu.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானேதி_வனிதா&oldid=3697744" இலிருந்து மீள்விக்கப்பட்டது