கொடைக்கானல் பன்னாட்டுப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடைக்கானல் சர்வதேசப் பள்ளி (Kodaikanal International School), (கேஐஎஸ்) என்பது கே -12(கல்வி) தரங்களுக்கு கல்வியை வழங்கும் இரு-பாலரும் படிக்கும், சுயநிதி குடியிருப்பு பள்ளியாகும் . இது 43 ஏக்கர்கள் (0.17 km2) ) நிலப்பரப்பில் இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ளது. [1] கொடைக்கானல் என்பது, மதுரைக்கு வடமேற்கே 121 கிலோமீட்டர்கள் (75 mi) தொலைவில் உள்ள பழனி மலையில் 2,133 m (6,998 அடி) உயரத்தில் உள்ள மலை வாழிடமாகும்.

கொடைக்கானல் சர்வதேச பள்ளியின் ஆரம்பகால மாணவர்களில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் இராபர்ட் எஃப். கோஹீன் (1936) மற்றும் அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் (1977) ஆகியோர் அடங்குவர்.

1975 ஆம் ஆண்டில், சர்வதேச பேக்காலுரேட் சான்றிதழ்த் திட்டம் (ஐபி) மற்றும் ஐபி மத்திய ஆண்டு திட்டம் (எம்ஒய்பி) ஆகியவற்றை வழங்கிய முதல் பள்ளியாக கேஐஎஸ் ஆனது. இது அனைத்து மாணவர்களுக்கும் அதன் சொந்த சான்றிதழான கேஐஎஸ் பட்டத்தை வழங்குகிறது. இது மத்திய மாநில கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் சங்கத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும், இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2]

தற்போதைய முதல்வர் கோர்லீ (கோரே) ஸ்டிக்ஸ்ரட் என்பராவார். [3]

வரலாறு[தொகு]

இப்பகுதியில் அதிகரித்து வரும் கிறித்தவ தொண்டு நிறுவன சமூகம் காரணமாக 1880 களின் முற்பகுதியில் தென்னிந்தியாவில் ஒரு ஆங்கில நடுத்தர பள்ளி தேவைப்பட்டது . ஒரு மலைவாசத்தலத்தில் ஒரு பள்ளி இருப்பது தொண்டு நிறுவனங்களின் குழந்தைகள் பலரின் உயிரையெடுக்கும் வெப்பமண்டல நோய்களிலிருந்து தப்பிக்க இயலும், மேலும் கற்றலைத் தூண்டும் குளிர்ச்சியான மற்றும் திறந்த சூழ்நிலையை வழங்கும் என்பதால் கொடைக்கானலில் இப்பள்ளி திறக்கப்பட்டது.

1900 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், மார்கரெட் எடி என்ற ஒரு பெண் தனது மகன் ஷெர்வுட்டை காண வந்தார். ஷெர்வுட் வத்தலக்குண்டு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இங்கு ஒரு பள்ளிக்கான அவசியத்தை உணர்ந்தார். தொண்டு நிறுவனங்கள் பள்ளி நிறுவுவதற்கான வழிகளை மேற்கொள்ளாது என முடிவு செய்து தானே ஒரு பள்ளியைத் தொடங்க முடிவு செய்தார். இவர் 1900 சூன் 1, அன்று முதலில் கொடைக்கானலில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். அதில் இவர் ஒரு குழுவை நிறுவினார். பள்ளிக்குத் தேவைப்படும் ஆசிரியர்களைக் கண்டறிவது மற்றும் பள்ளிக்கல்வி நடைபெற ஒரு கட்டிடத்தைத் தேடுவது போன்றவை கூட்டத்தின் முக்கிய நோக்கமக இருந்தது. .

திருமதி மார்கரெட் எடி, தலைமையில், ஒரு வருடத்திற்கும் மேலாக தி ஹைக்லெர்க் உணவகத்தை ஒரு பள்ளிக் கட்டிடமாக ஏற்பாடு செய்த பின்னர், "ஹைலெர்க் பள்ளி" 1901ம் ஆண்டு, ஜூலை 1 அன்று மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. 1902ம் ஆண்டில், கட்டிடத்தின் உரிமையாளர்கள் வாடகையை கடுமையாக அதிகரித்தனர். எனவே பள்ளி ராக் கோட்டேஜ் மற்றும் சென்ட்ரல் ஹவுஸுக்கு மாற்றப்பட்டது. 1905 இல், திருமதி. எடி கொடைக்கானலுக்குத் திரும்பினார். மேலும் தி ஹைலெர்க் உணவகத்தை அதன் புதிய உரிமையாளரிடமிருந்து 29,000 ரூபாய்க்கு 3.5 ஏக்கர்கள் (14,000 m2) நிலப்பரப்பை வாங்கினார். அந்த காலத்திலிருந்து, பள்ளி அதே இடத்தில் உள்ளது. திருமதி. எடி 1901 முதல் 1905 வரை, ஒரு நோய் காரணமாக அமெரிக்கா திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தவரை, ஊதியமின்றி கொடைக்கானல் பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். [4] [5]

குறிப்புகள்[தொகு]

  1. KODAIKANAL INTERNATIONAL SCHOOL seeks a PRINCIPAL பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம், retrieved 2010-4-21
  2. Cummings, Jane; Johnson, Ben; Wiebe, Paul (2000). In Celebration – Kodaikanal International School Centennial (1st ). Walla Walla, WA: KW International, Inc.. பக். 84–114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9703015-0-2. 
  3. KODAIKANAL INTERNATIONAL SCHOOL seeks a PRINCIPAL பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம், retrieved 2010-3-20
  4. "A school's century", The Hindu, Frontline, Events, "Kasturi & Sons Ltd", Sep 30 – Oct 13, 2000, archived from the original on 2009-07-05, பார்க்கப்பட்ட நாள் 2011-10-15
  5. KIS History and Traditions, archived from the original on 7 March 2010, பார்க்கப்பட்ட நாள் 2010-03-20