உள்ளடக்கத்துக்குச் செல்

கொடிசம்பங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடி சம்பங்கி [1]

கொடி சம்பங்கி என்பது அபோசினேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் சீனா மற்றும் இந்தோசீனா. கொடி வகையைச் சார்ந்தது. கொடி இரண்டு மீட்டர் முதல் ஐந்து மீட்டர் உயரம் வரை கூட வளரும். விதை அல்லது பதியன் மூலமாக செடிகளைப் பெறலாம். வளமான மண்ணும், நல்ல சூரியவெளிச்சமும் உள்ள இடங்களில் நன்றாக செழித்து வளரும்.

இலைகளின் அமைப்பு

[தொகு]

இதய வடிவிலான இலைகளையும், கூர்மையான இலை நுனியையும் உடையது. எதிர் எதிரே இரண்டு இலைகளை உடையது. இலை நான்கு முதல் ஏழரை சென்டிமீட்டர் அகலமும் ஆறு முதல் பதினொன்று சென்டிமீட்டர் நீளமும் கொண்டது. இலைகளின் நரம்பினை காணமுடியும்.

பூக்கள்

[தொகு]

கொத்துகளாய் மலரும். ஒரு கொத்தில் பத்திலிருந்து இருபது பூக்கள் வரை மலரும். மலரும்போது பச்சை நிறத்தில் இருக்கும் இப்பூக்கள் ஓரிரு நாட்களில் மஞ்சள் நிறத்தினை அடைந்துவிடும். அதிக நறுமணம் கொண்டவை. ஐந்து இதழ்களை உடையது.

பருவம்

[தொகு]

மார்ச் முதல் மே வரையிலும் சில சமயங்களில் சூலை முதல் அக்டோபர் வரையும் மலரும்.

பயன்கள்

[தொகு]

பசும்நிறம் கொண்ட சம்பங்கி பழத்தின் உள்ளே தட்டையான விதைகள் நிரம்பியிருக்கும். பூக்களை கூந்தலில் சூடிக்கொள்வர். கொடியானது கயிற்றைப்போல உறுதியானது. மருத்துவ குணநலன்களைக் கொண்டது[2] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. illustration circa 1790 from James Edward Smith and James Sowerby - Icones pictae plantarum rariorum descriptionibus et observationibus illustratae
  2. Tanaka, Yoshitaka; Van Ke, Nguyen (2007). Edible Wild Plants of Vietnam: The Bountiful Garden. Thailand: Orchid Press. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9745240893.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிசம்பங்கி&oldid=3917354" இலிருந்து மீள்விக்கப்பட்டது