கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம்
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் is located in Northern Province
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம்
Location within Sri Lanka
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைபல செயற்பாட்டு தொலைத்தொடர்பு கோபுரம்
கட்டிடக்கலை பாணிபின்னல் கோபுரம்
இடம்கொக்காவில், முல்லைத்தீவு, இலங்கை
நாடுSri Lanka
நிறைவுற்றது1982 (Restored in 2011)
திறப்பு6 சூன் 2011[1]
இடிக்கப்பட்டது2006[2]
செலவுரூபா 330 மில்லியன்
உயரம்
கூரை174 m (571 அடி)[1]

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் (Kokavil transmission tower) இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கொக்காவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோபுரம் 2011, சூன் 6 இல் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் உயரம் 174 மீற்றர் ஆகும். 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் 100 மீற்றர் உயரத்தில் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. வடக்கே இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் இக்கோபுரம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.

சீன அரசாங்கத்தின் உதவி[தொகு]

2009 ஆகத்து 11 ஆம் நாள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சீன அரசாங்கத்தின் உதவியுடன் தொலைத் தொடர்பு கோபுர வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 330 மில்லியன் ரூபா நிதி இதற்கென செலவிடப்பட்டுள்ளது.

இலங்கையிலேயே மிகவும் உயரமான கோபுரம்[தொகு]

இலங்கை வரலாற்றில் சப்பானியர்களால் 1978 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் பேதுருதாலகால மலை உச்சியில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு வட மாகாணத்திற்கென தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்காக மிகவும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் கோபுரம் இலங்கையிலேயே மிகவும் உயரமான கோபுரமாக கணிக்கப்படுகிறது.

எதிர்பார்க்கை[தொகு]

இதன் மூலம் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் வாழும் சகல மக்களும் தமக்கான தொலைக்காட்சி, வானொலி, தொலைத் தொடர்புச் சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மக்களுக்கான ஒளி, ஒலிபரப்பு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் இக்கோபுரம் செல்லிடத் தொலைபேசி உள்ளிட்ட தொலைபேசிச் சேவைகளை பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கிறது.

விசேட அம்சம்[தொகு]

டிஜிட்டல் சேவையானது கொக்காவில் கோபுரத்தின் ஊடாகவே இலங்கையின் முதல் முதலாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இத் தொலைத் தொடர்பு கோபுரத்தின் விசேட அம்சம் நவீன தொழில்நுட்பங்களுடள் கூடிய டிஜிட்டல் முறையிலான தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை வழங்குவதாகும். ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தும் டிஜிட்டல் Digital Visual Broadcast 2 சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளனர். இந்த டிஜிட்டல் சேவையானது ஐரோப்பிய நாடுகளில் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதன் புதிய சேவையான டிஜிட்டல் 2 சேவையையே இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Kokavil Tower is the tallest transmission Tower in South Asia". Northen Provincial Council of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  2. "Sri Lanka Air force bombed and destroyed Rs.30 million worth of LTTE's Radio Tower and equipment at Kokkavil". ஏசியன் டிரிபியூன். பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.