கை வலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடாவின் பிராசெர் ஆற்றில் மூழ்கு வலையினப் பயன்படுத்தி சால்மன் மீன் பிடித்தல்
மீன்களுடன் கை வலை
அல்ப்ரெக்ட் தூரெர் மீனவர்கள் கைவலையுடன், c 1490-1493

கை வலை (Hand net) அல்லது கூம்பு வலை என்றும் அழைக்கப்படுவது ஒரு மீன் பிடி வலையாகும். இந்த மீன்பிடி வலை அல்லது கண்ணி கூடை ஒரு கடினமான வளையத்தில் இணைக்கப்பட்டுத் திறந்து காணப்படும். இதனைக் கைப்பிடி ஒன்றின் ஒரு முனையில் பொருத்தப்பட்டிருக்கும் அல்லது பொருத்தப்படாமலும் இருக்கலாம். நீண்ட கைப்பிடி கொண்ட இந்த கை வலை பெரும்பாலும் மூழ்கு வலை என்று அழைக்கப்படுகிறது. கொக்கி ஒன்றில் பிடிபட்ட மீனை வெளியே எடுக்கத் தூண்டி பயன்படுத்தி மீன் பிடிப்பவர் பயன்படுத்தினால், இதனை இறங்கும் வலை என்றும் அழைப்பர்.[1]

பழங்காலத்திலிருந்தே நீரின் மேற்பரப்பில் காணப்படும் மீன்களைப் பிடிப்பதற்காக கை வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மஸ்கெல்லஞ்ச் அல்லது வடக்கு பைக் போன்ற வலைகள் நல்ல பயன்களைத் தரக்கூடியன. கை வலையில் பிடிக்கப்படும் மீன்களுக்கு உடல்ரீதியாக எவ்வித பாதிப்பும் ஏற்படாததால், கை வலைகள் மீன்களைப் பிடிப்பதற்கும், மீன்களை மீன் காட்சித் தொட்டியில் இடம் மாற்றவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சாக்கி சால்மன் மீன்பிடித்தலில் சிட்டினா, கெனாய் ஆறு மற்றும் காசிலோப் நதிகளில் கைவலைகள் பிரபலமாக உள்ளன. இங்கு மீன்பிடித்தல் பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் நடைபெறும். இது அலாஸ்கா குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது. ஆழம் குறைந்த நீரில் நண்டுகளை பிடிப்பதற்கும் கை வலைகளைப் பயன்படுத்தலாம். நண்டுகள் சண்டையிட்டு, வலைகளைக் கடித்துச் சேதப்படுத்துவதால் துணி கண்ணிக்குப் பதிலாகக் கம்பி அல்லது நைலானைப் பயன்படுத்தலாம்.[2]

வரலாறு[தொகு]

பாரம்பரிய மீனவர்களால் கை வலைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய மீன்கள் குளங்களின் ஆழமற்ற நீரிலும் கடலின் மேற்பகுதியிலும் பிடிக்கக் கைவலைகள் பயன்படுகின்றன. கை வலையானது ஒரு கையில் பிடிக்கும் வகையில் சிறிய வலை முதல் பல ஆண்கள் இணைந்து வேலை செய்யும் வகையில் பெரிய வலைகள் வரை வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.[3][4] வரலாற்று ரீதியாக, மேல் கிளாமத் ஆற்றின் கருக் மக்கள் கை வலைகள் மூலம் மீன்களை அறுவடை செய்தனர்.[5]

இங்கிலாந்தில், விலாங்கு மீன்களைப் பிடிப்பதற்கான ஒரே சட்டப்பூர்வ வழி கை வலையினைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதே ஆகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரெட் நதி மற்றும் செவர்ன் ஆறுகளில் நடைமுறையில் உள்ளது.[6]

படங்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fishing Tools - Landing Nets பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம்
  2. Dip net crabbing பரணிடப்பட்டது 2008-08-04 at the வந்தவழி இயந்திரம்
  3. Scoop nets
  4. Large scoop nets
  5. "Karuk dip nets". Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-08-21.
  6. "Environment Agency Eel Fishing Handbook, Byelaw 4, Section 2" (PDF). Archived from the original (PDF) on 2009-01-08. பார்க்கப்பட்ட நாள் 2008-08-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_வலை&oldid=3604011" இலிருந்து மீள்விக்கப்பட்டது