கைன்ரெம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கைன்ரெம் அருவி
Kynrem Falls
Kynrem Falls.jpg
மூன்று அடுக்குகளுடன் கைன்ரெம் நீர்வீழ்ச்சி
அமைவிடம்கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா, இந்தியா
ஆள்கூறு25°13′37″N 91°42′58″E / 25.227°N 91.716°E / 25.227; 91.716ஆள்கூறுகள்: 25°13′37″N 91°42′58″E / 25.227°N 91.716°E / 25.227; 91.716
வகைஅடுக்குகளால் ஆனது.
மொத்த உயரம்305 மீட்டர்கள் (1,001 ft)

கைன்ரெம் அருவி (Kynrem Falls) இந்திய மாநிலமான மேகாலயாவில் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் சிரபுஞ்சியிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சிரபுஞ்சிக்கு அருகிலுள்ள தங்கராங் பூங்காவிற்குள் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[1] இது இந்தியாவின் 7 ஆவது உயரமான நீர்வீழ்ச்சி என்ற சிறப்புக்கு உரிய அருவியாகும்.[2] 305 மீட்டர் (1,001 அடி) உயரத்தில் இருந்து செங்குத்தாக[3] விழும் கைன்ரெம் அருவியில் மூன்று அடுக்குகளாக நீர் கொட்டுகிறது.[4] கொட்டும் நீரானது இரண்டு வெவ்வேறு நீரோடைகள் அல்லது சிற்றோடைகளாகப் பரவுகிறது. ஒவ்வொன்றும் மூன்றாவது அடுக்கின் கடைசிக் கட்டத்தில் பாயும் போது ஒன்றிணைந்து வேகத்தைப் பெறுகின்றன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kynrem Falls". india9. 2010-06-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. 2012-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kynrem Falls". Times of India Travel. 2022-03-16 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Kynrem Falls". World Waterfall Database. 2010-06-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைன்ரெம்_அருவி&oldid=3403491" இருந்து மீள்விக்கப்பட்டது