உள்ளடக்கத்துக்குச் செல்

கைன்ரெம் அருவி

ஆள்கூறுகள்: 25°13′37″N 91°42′58″E / 25.227°N 91.716°E / 25.227; 91.716
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைன்ரெம் அருவி
Kynrem Falls
மூன்று அடுக்குகளுடன் கைன்ரெம் நீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா, இந்தியா
ஆள்கூறு25°13′37″N 91°42′58″E / 25.227°N 91.716°E / 25.227; 91.716
வகைஅடுக்குகளால் ஆனது.
மொத்த உயரம்305 மீட்டர்கள் (1,001 அடி)

கைன்ரெம் அருவி (Kynrem Falls) இந்திய மாநிலமான மேகாலயாவில் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் சிரபுஞ்சியிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சிரபுஞ்சிக்கு அருகிலுள்ள தங்கராங் பூங்காவிற்குள் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[1] இது இந்தியாவின் 7 ஆவது உயரமான நீர்வீழ்ச்சி என்ற சிறப்புக்கு உரிய அருவியாகும்.[2] 305 மீட்டர் (1,001 அடி) உயரத்தில் இருந்து செங்குத்தாக[3] விழும் கைன்ரெம் அருவியில் மூன்று அடுக்குகளாக நீர் கொட்டுகிறது.[4] கொட்டும் நீரானது இரண்டு வெவ்வேறு நீரோடைகள் அல்லது சிற்றோடைகளாகப் பரவுகிறது. ஒவ்வொன்றும் மூன்றாவது அடுக்கின் கடைசிக் கட்டத்தில் பாயும் போது ஒன்றிணைந்து வேகத்தைப் பெறுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kynrem Falls". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  2. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  3. "Kynrem Falls". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
  4. "Kynrem Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைன்ரெம்_அருவி&oldid=3846368" இலிருந்து மீள்விக்கப்பட்டது