கே. வி. முரளிதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. வி. முரளிதரன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், குந்துமாரனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான வெங்கிடசாமி கவுடுவுக்கு மகனாக பிறந்தார். தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் இருந்த இவர் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக பணியாற்றினார். பின்னர் இவர் பாஜகவில் இணைந்தார். 2001இல் தளி தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சர்பில் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] பின்னர் 2006 ஆம் ஆண்டு தளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன்பிறகு பாஜவில் இருந்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 2019 ஆகத்து 10 அன்று தன் 54ஆவது வயதில் இறந்தார்.[3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._முரளிதரன்&oldid=2787580" இருந்து மீள்விக்கப்பட்டது