கே. பாலபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. பாலபாரதி
Selvi. K. Balabharathi, CPI(M) Politician
தொகுதி திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழ்க்கை துணைவர்(கள்) திருமணம் ஆகாதவர்

கே. பாலபாரதி (K. Balabharathi) ஒரு இந்திய பெண் அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியின் சார்பாக 2006 முதல் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவர் பி.எஸ்.சி., பட்டதாரி ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தற்போது கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்[1].

பொது வாழ்க்கை[தொகு]

பிரச்சனைகளுக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2006, 2011 ஆம் ஆண்டுகளில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்[2].

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாலபாரதி&oldid=2635188" இருந்து மீள்விக்கப்பட்டது